பகலில் "வேலை"...இரவில் "சாலை"..! ஒரு வார காலம் சாலையிலேயே உறங்கிய மருத்துவர்..!

By ezhil mozhiFirst Published Apr 11, 2020, 1:25 PM IST
Highlights

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என்பதால், தெரிந்தோ தெரியாமலோ கொரோனா ஏற்பட்டு  தான் பதிப்பது மட்டுமல்லாமல், தன்னை சார்ந்தவர்களும் மற்றவர்களும் பாதிக்ககூடிடுமே.. என மனதளவில்  நினைத்த அவர், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

பகலில் "வேலை"... இரவில் "சாலை"..! ஒரு வார காலம் சாலையிலேயே உறங்கிய மருத்துவர்..!  

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த ஒரு தருணத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் சச்சின் நாயர் என்பவர் பகலில் வேலை செய்தும் இரவு நேரத்தில் சாலையில் தங்கியும் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என்பதால், தெரிந்தோ தெரியாமலோ கொரோனா ஏற்பட்டு தான் பதிப்பது மட்டுமல்லாமல், தன்னை சார்ந்தவர்களும் மற்றவர்களும் பாதிக்ககூடிடுமே.. என மனதளவில் நினைத்த அவர், தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.


 
அதாவது தன்னால் தன்னுடைய மனைவிக்கோ குழந்தைக்கோ பார்த்து விடக்கூடாது என்பதாலும் அதேநேரத்தில் தன்னுடைய முழு பணியும் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையில் செலுத்த முடிவு செய்த சச்சின் நாயர் கடந்த ஒரு வார காலமாக பகல் நேரத்தில் மருத்துவமனையில் முழுமையாக வேலை செய்துவிட்டு பின்னர் வீடு திரும்பும் போது, சாலையின் ஒரு ஓரமாக தனது காரை நிறுத்தி விட்டு   
காரிலேயே இருக்கையை சாய்த்து விட்டு உறங்கி வந்துள்ளார்.

மேலும் அவருக்கு தேவையான சோப்பு, தண்ணீர், பிரஷ், லேப்டாப் என அனைத்தும் காரிலேயே வைத்து இருந்திருக்கிறார்.மனைவி மற்றும் குழந்தையிடம் வீடியோ கால் மூலமாக பேசி வந்துள்ளார். பிறகு இந்த செய்தி மருத்துவமனைக்கு தெரிந்து, ஒரு ஓட்டலில் மருத்துவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டலில் தங்கி மருத்துவமனைக்கு சென்று வருவதாக உள்ளார்.

இந்த ஒரு விஷயம் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரியவரவே அவரை பாராட்டி உங்களது உணர்வுக்கு ஒரு சல்யூட் என ட்வீட் செய்து உள்ளார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மருத்துவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

click me!