அடிதூள்! "பிரதமர் மோடியை" பின் தொடர்கிறது அமெரிக்க வெள்ளை மாளிகை! வேறு எந்த உலக தலைவருக்கும் இல்லாத பெருமை!

By ezhil mozhiFirst Published Apr 11, 2020, 2:21 PM IST
Highlights

பாஜக இந்தியாவில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தார். அதில் கருப்பு பணம் ஒழிப்பு, ஜிஎஸ்டி, அயோத்தி பிரச்சினையில் சுமுகமான தீர்வு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். 

அடிதூள்! "பிரதமர் மோடியை" பின் தொடர்கிறது அமெரிக்க வெள்ளை மாளிகை! வேறு எந்த உலக தலைவருக்கும் இல்லாத பெருமை!

அமெரிக்க  வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே ஒரு உலகத்தலைவர என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.

உலக நாடுகளை இன்று பிரதமர் மோடியை பெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வை பார்க்க முடிகிறது. தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் கொரோனாவிற்கு முன் கொரோனாவிற்கு பின் என்ற பாணியில் சில முக்கிய விஷயங்களை எடுத்துரைக்கலாம். அதாவது வல்லரசு நாடான அமெரிக்கா தான் எதிலும் முதன்மை என்ற ஒரு போக்குதான் முன்பிருந்தது. இந்தியாவை பொருத்தவரையில் வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இருந்து வருகிறது.

ஆனால் பாஜக இந்தியாவில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்ற பின் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தார். அதில் கருப்பு பணம் ஒழிப்பு, ஜிஎஸ்டி, அயோத்தி பிரச்சினையில் சுமுகமான தீர்வு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி பல அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது கொரோனா பாதியிலும் உலக நாடுகளுக்கே எடுத்துக்காட்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடங்கியவுடன் காலதாமதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பு பரவி கொத்துக்கொத்தாக அமெரிக்காவிலும் இத்தாலியிலும் மடிந்து வருகின்றனர். இன்னொருபக்கம் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் அந்த நாட்டில் கட்டுக்குள் அடக்கினாலும், உலகம் முழுக்க 209 நாடுகளுக்கும் மேலாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஒரு நிலையில் உலக நாடுகளுக்கு மிக முக்கிய மருந்து ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவை இப்போதும் எதிர்பார்க்கிறது உலகநாடுகள். 

அந்தவகையில் வல்லரசு நாடான அமெரிக்காவும் இந்தியாவை கையேந்தியது. அதன்படி தற்போது இந்தியாவில் சற்று வேகமெடுத்து உள்ள கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தியா. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று தடையை தகர்த்தி,  அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் மற்ற சில நாடுகளுக்கும் மருந்தை அனுப்பி வைத்து இந்தியா. அதன் மூலம் அமெரிக்க அதிபர், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த ஒரு நிலையில் மேலும் ஒரு சுவாரசிய தகவலாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பின் தொடரும் உலக நாடுகளை சேர்ந்த ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வெள்ளை மாளிகை அலுவலக பக்கத்தை தற்போது 21 மில்லியன் பின் தொடர்பாளர்கள் இருக்கின்றனர். அதில் 19 பேரை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்கிறது 

அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலானியா ட்ரம்ப், அதிபர் பென்ஸ் உள்ளிட்ட 16 பேர் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தவிர்த்து உலக தலைவர்களில் பிரதமர் மோடியை மட்டுமே அவர்கள் பின்தொடர்கின்றனர். மேலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதன்பிறகு பிரதமர் அலுவலக கணக்குகளும் பின்தொடரப்படுகின்றன. 

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீடித்து வரும் இந்த நட்புறவை மீண்டும் வலுவாக்கும் பொருட்டு இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்று அனைவரும் பாராட்டுகின்றனர். இது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. மேலும் உலக அளவில் பிரதமர் மோடி மாபெரும் தலைவராக உருவெடுத்து வருகிறார்.

click me!