இந்த ஆண்டு சுற்றுலா செல்ல மக்கள்  தேர்வு செய்த சிறந்த இடம் “துபாய் “

First Published Oct 18, 2016, 7:05 AM IST
Highlights

இந்த ஆண்டு சுற்றுலா செல்ல மக்கள்  தேர்வு செய்த சிறந்த இடம் “துபாய் “

பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஏராளமானோர் பணிச்சுமை காரணமாக எழும் மனஅழுத்தத்தை மாற்றுவதற்காக சுற்றுலா செல்வதை அனைவரும் பெரிதும் விரும்புகிறோம்.

இந்நிலையில், வரும்  அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தீபாவளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதற்காக ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 தேதி வரை ஹோட்டல்ஸ்.காம் என்ற வெப்சைட்டில் அதிகம் பேர் சுற்றுலாதலங்கள் குறித்த விபரங்களை தேடியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

இதில்  சுற்றுலா மேற்கொள்வதற்காக அதிகம்  தேடப்பட்ட  இடம் துபாய். இதற்கு  அடுத்தபடியாக இந்தோனேஷியாவில் உள்ள பாலி, தாய்லாந்தில் உள்ள புக்கெட் ,  பாங்காங் மற்றும் சிங்கப்பூர்  உள்ளன.

இதேபோன்று, . இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர், மும்பை, டெல்லி உள்ளிட்டவை டாப்  டென் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 

நாம் விரும்பும் இடங்களை தேர்வு செய்துவிட்டோமானால், எத்தனை பேர் செல்கிறோம், எத்தனை நாட்கள் தங்கியிருப்போம், எந்த மாதிரியான வசதி படைத்த ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகள் தேவை என்பது போன்ற விவரங்களை நாம் டிராவல் ஏஜென்சிகளிடம் தெரிவித்தால் டிக்கட் உட்பட அதற்காக ஆகும் மொத்த செலவு, முதலில் செலுத்த வேண்டிய கட்டணம், மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணை உட்பட அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் தெரிவித்துவிடுகின்றன.

இதனால்  வெளிநாடு சென்று , விடுமுறை  நாட்களை  மகிழ்வாக  கொண்டாட  மக்கள்  விரும்புகின்றனர்  என  தெளிவாக  தெரிகிறது.

click me!