Horoscope: 22 வருடங்களுக்கு பிறகு ராசி மாறும், சனி பெயர்ச்சியால், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால், ஒரு சில ராசிக்காரர்கள் தான் அதிகம் ஏழரை வருடங்கள் பாதிக்கப்படுவார்கள்.
அவர்கள் ஏப்ரல் 29-ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் சிக்குவார்கள். ஆனால், இப்பெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலைத் துறையில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி சம்பந்தமான விஷயங்களில் அதிக எச்சரிக்கை அவசியம். இந்த நேரத்தில் நீங்கள் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமண யோகம் கூடி வரும்.
தனுசு:
சனி பெயர்ச்சி உங்களுக்கு நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பணம் சம்பந்தமாக மனதில் பலவிதமான எண்ணங்கள் வரலாம். தொழிலில் முன்னேற புதிய வழிகளை யோசிப்பீர்கள். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு நல்ல நேரமாக இருக்கும். அதிகாரிகள் உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
துலாம்:
வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகளை தீர்க்க இது சிறந்த நேரம். நீங்கள் சில புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பீர்கள், அது உங்களுக்கு நன்மை பயக்கும். புது வீடு, சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
மீனம்:
சனி பெயர்ச்சி உங்களுக்கு, ஆடை வியாபாரிகளுக்கு ஏமாற்றம் தரும் நாளாக அமையும். விரைவான லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான வழிகளைக் கையாளாதீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும். பெண்கள் துணிச்சலுடன் செயல்படுவார்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும்.