பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு வையுங்கள்;  முகத்தில் அழகு கூடும்..!!

By Kalai Selvi  |  First Published Oct 24, 2023, 7:54 PM IST

பெண்களே உங்கள் முகத்துக்கு ஏற்றவாறு பொட்டு வைப்பது நல்லது. எனவே, எந்த வடிவ முகத்திற்கு எந்த வடிவ பொட்டு சிறந்தது என்று பார்க்கலாம் இங்கே...


பெண்களை அழகாக்கும் விஷயங்களில் பொட்டுவும் ஒன்று. நல்ல தோற்றத்தைக் கொடுப்பதில் பொட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பொட்டுகளில் பல வகைகள் மற்றும் வண்ணங்கள் ஏற்கனவே கடைகளில்
கிடைக்கின்றன. சிலர் ஸ்டைல்   பொட்டு வைப்பார்கள். இன்னும் சிலர் நீளமான  பொட்டுகளை வைப்பார்கள். ஆனால் சிலர் முகத்தில் பொருத்தமில்லாத பொட்டுகளை வைப்பார்கள். ஆனால் இது உங்கள் முகத்தின் கவர்ச்சியை குறைக்கும். பொட்டு வைக்கும்போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளும் உள்ளன. இப்படி ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைல்   பொட்டு பொருந்தும். அந்த குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்..

வட்ட முகம் கொண்டவர்கள்: உங்கள் முகம் வட்டமாக இருந்தால்.. நீளமாக இருக்கும் பொட்டுகளை வைக்கலாம். இது உங்கள் தோற்றத்தை உயர்த்தும். இதனால் நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  ஏன் பொட்டு வைக்கல? விளம்பரத்தால் வந்த பிரச்சனை - பிரபல நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - என்ன நடந்தது?

வைர வடிவ முகம் கொண்ட மக்கள்: வைர வடிவமுள்ளவர்கள் டிசைன்களைக் காட்டிலும் எளிமையான பொட்டுகள் வைப்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் இருக்க கூடாது..ஏன் தெரியுமா?

ஓவல் வடிவ மக்கள்: ஓவல் வடிவம் கொண்டவர்கள் நீண்ட நெற்றி மற்றும் கன்னம் கொண்டவர்கள். அவர்கள் எந்தவிதமான பொட்டுகளையும் 
தேர்வு செய்யலாம். 

சதுர வடிவ மக்கள்: ஒரு சதுர முகத்தை உடையவர்கள் வடிவமைப்புகளை முன்னிலைப்படுத்தும் வட்டமான மற்றும் சந்திரன் வடிவ பொட்டுகளை வைக்கலாம். இதனால் முகம் நன்றாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதய வடிவம் உள்ளவர்கள்: இதய வடிவம் உள்ளவர்கள் தட்டையான நெற்றி மற்றும் கன்னம் கொண்டவர்கள். எனவே வட்டமாகவும், சற்று நீளமாகவும் இருக்கும் பொட்டுகளை வைக்கலாம். இதனால் உங்கள் முகம் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமானதாக இருக்கும். இந்த சிறிய குறிப்புகளை பின்பற்றினால் நீங்கள் அழகாக இருப்பீர்கள்.

மேலும் சில நேரங்களில், சில வகையான பொட்டுக்கள் சீக்கிரமாகவே நெற்றியில் இருந்து விழுந்துவிடும். எனவே, பொட்டு வைக்கும் முன் பவுடர் போட வேண்டும். பவுடரைப் பயன்படுத்துவது பொட்டுக்கள் விரைவாக விழாமல் தடுக்கிறது.

click me!