இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து X (ட்விட்டர்), YouTube மற்றும் டெலிக்ராம் தலங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அனுப்பியுள்ளது. இது குறித்த முழு தகவலை பின்வருமாறு காணலாம்.
இந்த விஷயம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அவர்கள் "இந்திய இணையத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்காத முடியாது என்றும். அவற்றை எதிர்க்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிகவும் கட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் “சமூக ஊடக இடைத்தரகர்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் அவர்களின் "Safety Harbour" திரும்பப் பெறப்படும்” என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
Safety Harbour என்பது ஒரு சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் ஒரு விதியாகும், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அக்டோபர் 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், சமூக ஊடக இடைத்தரகர்களான X, YouTube மற்றும் Telegram ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதில் இந்திய இணையத்தில் உள்ள குழந்தை பாலியல் வன்கொடுமை சமந்தமான விஷயங்களை (CSAM - Child Sexual Abuse Material) இந்திய தளத்திலிருந்து அகற்றுமாறு எச்சரித்துள்ளது.
undefined
ஆந்திராவில் ஜெகனை முந்துகிறாரா சந்திரபாபு நாயுடு; தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன கூறுகிறது?
இந்த தளங்களுக்கு வழங்கப்படும் அறிவிப்புகள், அவற்றின் இயங்குதளங்களில் உள்ள CSAMக்கான அணுகலை உடனடியாக மற்றும் நிரந்தரமாக அகற்றுதல், அல்லது முடக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும் எதிர்காலத்தில் CSAM பரவுவதைத் தடுக்க, உள்ளடக்க அளவீட்டு வழிமுறைகள் மற்றும் அறிக்கையிடல் வழிமுறைகள் போன்ற செயலூக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அமைச்சகத்தின் இந்த அறிவிப்புகளுக்கு இணங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், ஐடி சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் அவர்களின் பாதுகாப்பான Safety Harbour திரும்பப் பெறப்படும் என்று அமைச்சகம் மூன்று சமூக ஊடக இடைத்தரகர்களை எச்சரித்துள்ளது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “ட்விட்டர், யூடியூப் மற்றும் டெலிகிராம் தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கான பதிவுகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
"தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை உருவாக்க அரசு உறுதியாக உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் சமூக ஊடக இடைத்தரகர்களிடமிருந்து தங்கள் தளங்களில் குற்றவியல் அல்லது தீங்கு விளைவிக்கும் இடுகைகளை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையான எதிர்பார்ப்புகளை விதிக்கின்றன. அவர்கள் விரைந்து செயல்படாவிட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் அவர்களது Safety Harbour திரும்பப் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
Safety Harbour என்பது ஒரு சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் ஒரு விதியாகும், இது கொடுக்கப்பட்ட விதியை மீறாததாகக் கருதப்படும் சில நடத்தைகளைக் குறிப்பிடுகிறது.
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்திய இணையத்தில் இருந்து இத்தகைய தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு தொடர்ந்து குரல் கொடுப்பவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம், 2000, CSAM உட்பட ஆபாச உள்ளடக்கத்திற்கு தீர்வு காண்பதற்கான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66E, 67, 67A மற்றும் 67B ஆகியவை ஆபாசமான அல்லது ஆபாசமான உள்ளடக்கத்தை ஆன்லைனில் அனுப்புவதற்கு கடுமையான தண்டனைகளை விதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆந்திர அரசியலில் சொந்தக் கட்சியினரால் ஓரங்கட்டப்படும் நடிகை ரோஜா? பின்னணி என்ன?