ஆந்திர அரசியலில் சொந்தக் கட்சியினரால் ஓரங்கட்டப்படும் நடிகை ரோஜா? பின்னணி என்ன?

By Ramya s  |  First Published Oct 6, 2023, 2:51 PM IST

ஆந்திர அமைச்சர் ரோஜா தனது சொந்த கட்சியினராலேயே ஓரங்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் நடிகை ரோஜா சுற்றுலா துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்திருப்பதாக கூறியது அம்மாநில அரசியல் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் நடிகை கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, தெலுங்கு தெசம் கட்சி தலைவர்கள் தன்னை இழிவான வார்த்தைகளால் அவமதிப்பதாக கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் தன்னை இழிவாக பேசியவர்கள் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார். தன்னை பற்றி அவதூறாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடு ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் தனது சொந்த கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ரோஜாவுக்கு பெரியளவில் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. ரோஜாவுக்க்கு ஆதரவாக ஒரு சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர். வலுவான பதிலடி கொடுக்கும் பெண் அமைச்சர்களோ அல்லது அமைச்சர்களோ யாரும் ரோஜாவை பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் அக்கட்சிக்க்குள் விவாதப் பொருளாக மாறி உள்ளது. பெண் அமைச்சர்கள் விடாத ரஜினி, தானேடி வனிதா, உஷாஸ்ரீ சரண் ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் சொந்த கட்சிக்குள்ளேயே ரோஜா ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும், சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி பெண் தலைவர்களான அனிதா வாங்கலபுடி மற்றும் சுவாதி ரெட்டி குறித்து ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியினர் புகைப்படங்களை வெளியிட்டு தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தபோது அமைச்சர் ரோஜா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் சட்டசபையில், தெலுங்கு தேச கட்சி தலைவர் நர புவனேஸ்வரி குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர்கள் தரக்குறைவாக விமர்சித்த போது நடிகை ரோஜா மேஜையை தட்டி சிரித்த சம்பவமும் அரங்கேறியது.

அரசியல் கட்சி பாகுபாடுகளை தாண்டி ஒரு பெண்ணை அவமதிக்கும் போது அதற்கு ரோஜா கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது.இந்த சூழலில் ஒய்.எஸ்.ஆர்.கட்சியில் உள்ள மற்ற பெண் தலைவர்கள் ரோஜாவுக்கு எப்படி ஆதரவளிப்பார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  தனது கட்சி தொண்டர்கள் மத்தியிலும் ரோஜாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறாராம் ரோஜா.

ஆந்திராவில் ஜெகனை முந்துகிறாரா சந்திரபாபு நாயுடு; தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன கூறுகிறது?

1991-ம் ஆண்டு பிரேம் தப்பாசு என்ற படத்தின் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த ரோஜா 90-களில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழில் ரஜினி, சரத்குமார், கார்த்தி, பிரபுதேவா அப்போது உச்சத்தில் இருந்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். பின்னர் திரைத்துறையில் இருந்து அரசியல் வாழ்க்கையில் ஈடுபடப்போவதாக அறிவித்த ரோஜா 1998-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 

அக்கட்சியின் மகளிரணி தலைவராக இருந்த ரோஜா, நகரி, சந்திரகிரி தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்னர் 2008-ம் ஆண்டு, ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் ஒய்.எஸ்.ஆர் மறைவுக்கு பிறகு, அவரின் மகன் ஜெகன்மோகன் தொடங்கிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா வெற்றி பெற்றார். தற்போது ஆந்திராவின் அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!