Bengaluru : கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ஒரு வினோதமான திருட்டு வழக்கு குறித்து, அம்மாநில போக்குவரத்து கழக துணைத் தலைவர் என்.ரவி ரெட்டி, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று அளித்த புகாரின் பேரில் போலீஸார் குழப்பத்துடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நடிகர் வடிவேலு அவர்கள் கிணத்த காணோம் என்று சொல்லுவதை போல பெங்களுருவில் இருந்து ஒரு வினோதமான செய்தி வெளிவந்துள்ளது. அங்கு சில தினங்களுக்கு முன்பு கட்டுமான பணி துவங்கப்பட்ட பேருந்து நிழற்குடை ஒன்று, பரபரப்பான சாலையில் இருந்து காணாமல் போயுள்ளது. கன்னிங்ஹாம் சாலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை கொண்டு கட்டப்பட்ட நிழற்குடை அது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சுமார் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த அந்த பேருந்து நிழற்குடையில் இருந்த நாற்காலிகள், மேற்கூரைகள், தூண்கள் என்று அனைத்துமே காணாமல் போயுள்ளது பெரும் ஆச்சர்யத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேருந்து நிழற்குடை பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தால் (BMTC) பராமரிக்கப்பட்டு வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருட்டு குறித்து போக்குவரத்து கழக துணைத் தலைவர் என்.ரவி ரெட்டி செப்டம்பர் 30ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தற்போது தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிஆர்பிசி பிரிவு 157ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விசித்திரமான திருட்டு குறித்து பல கருத்துக்களை இணையத்தில் தினமும் பல பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சிபிஎம் தலைவர் அனத்தலாவட்டம் ஆனந்தன் காலமானார்!