சிபிஎம் தலைவர் அனத்தலாவட்டம் ஆனந்தன் காலமானார்!

By Manikanda Prabu  |  First Published Oct 5, 2023, 6:40 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அனத்தலாவட்டம் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 86.
 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அனந்தலாவட்டம் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 86. உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், திருவனந்தபுரத்தில் காலமானார். அனந்தலாவட்டம் ஆனந்தன் தற்போது சிஐடியுவின் மாநிலத் தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

திருவனந்தபுரத்தில் 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பிறந்த அவர், சிரான்கீஷ் சித்திரவிலாசம் மற்றும் கடைக்காவூர் எஸ்எஸ்பிபியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.  1950களில் மாணவராக இருக்கும்போதே பொதுப்பணியைத் தொடங்கிய அவர், கயிறு தொழிலாளர்கள் அமைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார்.

Latest Videos

1957ல் திருவிதாங்கூர் தென்னை நார் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான அவர், 1960 முதல் 1971 வரை திருவிதாங்கூர் தென்னை நார் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். 1971 முதல் கேரள தென்னை நார் தொழிலாளர் மையத்தின் (சிஐடியு) அலுவலகப் பொறுப்பாளராக இருந்து வந்தார்.

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,000 இழப்பீடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

அனந்தலாவட்டம் ஆனந்தன் சிபிஎம் கட்சியின் கிளைச் செயலாளராகவும், சிரான்கீசு வட்டாரக் குழுச் செயலாளராகவும், அட்டிங்கல் பகுதிக் குழுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1971ஆம் ஆண்டில் சிபிஎம் திருவனந்தபுரம் மாவட்டக் குழு உறுப்பினரான அவர், மிசா அவசரச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார். 1979 முதல் 1984 வரை சிராயின்கீழ் பஞ்சாயத்து தலைவராகவும், 1985ல் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராகவும், பின்னர் மாநிலச் செயலக உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

1987ஆம் ஆண்டில் அட்டிங்கல் தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1996ல் வக்கம் புருஷோத்தமனை 1016 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் அட்டிங்கல் மக்கள் பிரதிநிதியானார். 2006-ல் அட்டிங்கல் தொகுதியில் சி.மோகனச்சந்திரனை 11208 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் சட்டசபைக்கு தேர்வானார்.

click me!