கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை உச்சி மாநாடு… பிரதமர் மோடியின் 5 உறுதிமொழிகள்!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 12:51 PM IST
Highlights

2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்டுவோம் என கிளாஸ்கோ ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில்  ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது.  இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.  இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக கிளாஸ்கோ சென்றார். இதுக்குறித்து தனது டிவிட்டரிலும் கருத்து பிரதமர் மோடி இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதுக்குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, கிளாஸ்கோ உச்சி மாநாடு பல்வேறு உலகத் தலைவர்களுடன் உரையாட ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குவதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரிட்டனில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி, 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கரியமில வாயு வெளியேற்றம் என்ற இலக்கை எட்டுவோம் என உறுதியளித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருவதாகவும் இதன் பலன் விரைவில் தெரியும் என்றும் குறிப்பிட்டார். மேலும், காலநிலை மாற்றத்தில் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உலகம் இன்று ஒப்புக்கொள்கிறது. உங்கள் அனைவருக்கும் ஒரு வார்த்தை இயக்கத்தை நான் முன்மொழிகிறேன். லைஃப் என்பது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்று பொருள்படும். இன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து லைஃப் என்பதை ஒரு இயக்கமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.  உலகின் 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியா கரியமல வாயு வெளியேற்றத்தில் 5 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும்  என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் மின்சாரத் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்வோம் என்றும் குறிப்பிட்டார். இதேபோ, 2070 ஆம் ஆண்டுக்குள்  பூஜ்ஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலங்கை இந்தியா எட்டும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இதுமட்டுமின்றி பருவநிலை மாற்றத்தின சவாலைச் சமாளிக்க ஐந்து முக்கிய உறுதிமொழிகளையும் பிரதமர் மோடி அளித்தார். அவை, 2070 ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வைப் பூஜ்ஜியம் ஆக்கும் என்றும் non-fossil energy எனப்படும் புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறனை வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட்டாக இந்தியா உயர்த்தும் என்றும் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்கும் என்று கூறிய அவர், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின் தேவையில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யும் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த கார்பன் உமிழ்வுகளிலிருந்து 1 பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை இந்தியா குறைக்கும் என்ற இந்த ஐந்து உறுதிமொழிகளை பிரதமர் மோடி மாநாட்டில் அளித்துள்ளார்.

click me!