2022ம் ஆண்டு பள்ளிகளை ஒட்டுமொத்தமாக மூட முடிவு… வெளியான ‘ஷாக்’ தகவல்

By manimegalai aFirst Published Nov 1, 2021, 7:08 PM IST
Highlights

2022ம் ஆண்டு முக்கியத்துவம் இல்லாத பள்ளிகளை மூட ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி: 2022ம் ஆண்டு முக்கியத்துவம் இல்லாத பள்ளிகளை மூட ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டில் ரயில்வே நிர்வாகமானது ரயில்களை இயக்குவது, அவற்றை பராமரிப்பது மட்டுமின்றி வேறு சில முக்கிய நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது. அதில் முக்கியமானது பள்ளிகளை நடத்தி வருவதுதான்.

இந்த பள்ளிகளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் ரயில்வே துறையில் அல்லாத பெற்றோர்களின் குழந்தைகளும் படித்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக 2 சதவீதம் என்ற அளவில் தான் ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் ரயில்வே பள்ளிகளில் படிக்கின்றனர்.

குறைந்த சதவீதம் பேர் மட்டுமே இதுபோன்ற பள்ளிகளை தொடர்ந்து இயக்க வேண்டுமா என்ற கேள்விகள் பலமுறை எழுந்துள்ளன. ரயில்களை மேலாண்மை என்பது மிக பெரிய சவாலானது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரயில்வே பள்ளிகள் பராமரிப்பு என்பது மேலும் நெருக்கடி தரும் விஷயமாக இருக்கிறது.

இந் நிலையில் முக்கியத்துவம் இல்லாத ரயில்வே பள்ளிகளை மூடிவிடலாம் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் பரிந்துரைத்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரையில் சில முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

அதாவது முக்கியத்துவம் இன்றி இயங்கி வரும் ரயில்வே பள்ளிகளை முதலில் கணக்கெடுக்க வேண்டும். அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்வி எந்த தருணத்திலும் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை மூடப்படும் தேதிகளை முன்கூட்டியே தவறாது தெரிவிக்க வேண்டும்.

இல்லை, எங்களுக்கு பள்ளிகள் வேண்டும், அதை நடத்துகிறோம் என்னும் பட்சத்தில் மிக சரியான காரணங்களை கோடிட்டு காட்ட வேண்டும். மூடப்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கேவி எனப்படும் கேந்திரிய வித்யாலயா அல்லது மாநில அரசுகளின் பள்ளிகளில் சேர்த்து கல்வி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம் பெற்று உள்ளன.

இது குறித்து நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களின் மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரைகள் தவிர முக்கியமாக பள்ளிகள் மூடப்படும் வரை குரூப் பி, இளநிலை நிர்வாக அளவிலான ரயில்வே  ஊழியர்களுக்கு எந்த பணி உயர்வும் அளிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ரயில்வே வாரியத்திடம் எந்த ஒரு கோரிக்கைகளையும், எந்த காரணம் கொண்டும் முன் வைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை பொருளாதார ஆலோசிகரின் இந்த அறிக்கை ஜனாதிபதி, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னமும் அங்கிருந்து முக்கிய தகவல்கள் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் சில முக்கிய அறிவிப்புகள் அல்லது முக்கிய முடிவுகள் சீக்கிரம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அதுபோன்று பரிந்துரைகள் பின்பற்றப்பட்டு அமலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் முக்கியத்துவம் அல்லாத அல்லது பராமரிக்க முடியாத ரயில்வே பள்ளிகள் 2022ம் ஆண்டு முதல் இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைகள் மீது வெகு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறது. அப்படி இருந்தால் ரயில்வே பள்ளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் எனலாம்.

click me!