
குடியரசுத் தலைவர் தேர்தல் களை கட்டத் தொடங்கியுள்ளது. பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரை களத்தில் இறங்கியுள்ளன.
ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மீராகுமாரும் வரும் திங்கள் கிழமைக்கு மேல் வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசட் பிளஸ் யாருக்கு
குடியரசுத் தலைவர், பிரதமர், துணை குடியரசுத் தலைவர், மாநில முதல் அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பில் ஈடுபடும் வீரர்கள் அனைவரம் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள். எந்த வித ஆயுதமும் இல்லாமல் எதிராளியை வீழ்த்தும் பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே இதுவரை இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.