“கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு டும்..டும்..டும்…”

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
“கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு டும்..டும்..டும்…”

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றவர் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2011-இல் இந்திய உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆவார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வெற்றி பெற்று, மீண்டும் கிரிக்கெட்டில் களம் இறங்கினார்.

இந்நிலையில், யுவராஜ் சிங் அவரது காதலியான மாடல் அழகி ஹாசல் கீச்சை இன்று கரம் பிடிக்கிறார்.

யுவராஜ்சிங்கிற்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் ஏற்கவனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், இவர்களது திருமணம் இன்று பஞ்சாப் மாநிலம், சண்டிகர் அருகே உள்ள பதேகர் சாகிப்பில் திருமணம் நடைபெற உள்ளது. 

இதற்காக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு நடைபெற்ற விருந்தில் விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை யுவராஜ் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

Hostel Incident : தோழி சென்ற சில நிமிடங்களில்.. விடுதிக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ