அப்பாடா..!! ஒரு வழியாக அவைக்கு வந்தார் மோடி - எதிர்கட்சிகள் கடும் அமளி

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 11:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
அப்பாடா..!! ஒரு வழியாக அவைக்கு வந்தார் மோடி - எதிர்கட்சிகள் கடும் அமளி

சுருக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி தொடங்கியது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அவைக்கு வர வேண்டும்  என வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மக்களவைக்கு வருகை தந்தார். இதையடுத்து எதிர்கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்தும், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்டப்டது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களவையிலும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  

PREV
click me!

Recommended Stories

NHAI Toll Fraud: 7 மாநிலங்கள்.. 14 இடங்களில் அதிரடி ரெய்டு.. டோல் பணம் எங்கே போனது?
School Uniforms: இந்தியப் பள்ளிகளில் ஏன் விதவிதமான யூனிஃபார்ம்? 7 சுவாரஸ்யமான காரணங்கள்!