இப்படியும் ஒரு காதலா.. நெற்றியில் குங்குமமிட்டு இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர்.. உறவினர்கள் முன் சபதம்.!

By vinoth kumar  |  First Published Nov 21, 2022, 1:16 PM IST

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் பிதுபன் தமுலி (27) என்ற இளைஞரும்  பிரதனா போரா பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.


இறந்த காதலியின் சடலத்திற்கு நெற்றியில் குங்குமமிட்டு, மாலை மாற்றிக் கொண்டு காதலன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் பிதுபன் தமுலி (27) என்ற இளைஞரும்  பிரதனா போரா பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருவீட்டாரும்  முடிவு எடுத்தனர். இந்நிலையில், காதலி பிரதனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- LPG Gas: எல்பிஜி கேஸ் சிலிண்டரில் புதிய மாற்றம்! QR குறியீட்டை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு: என்ன காரணம்?

இதனை சற்றும் எதிர்பாராத காதலன் காதலியின் உயிரிழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதார். அப்போது, காதலியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணிய காதலன், இறுதி சடங்கில் பங்கேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது காதலியின் சடலத்தையே திருமணம் செய்து கொண்டார்.  நெற்றியில் குங்குமிட்ட அவர், மாலை மாற்றிக் கொண்டார்.

அதோடு காதலி சடலத்திற்கு முன்பாக, வாழ்நாளில் நீ மட்டுமே என் மனைவி. இனியும் நான் உன் நினைவாகவே தனியாகவே வாழ்வேன் என சபதம் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

இதையும் படிங்க;-  Arif Khan: ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுகிறேன்! கேரள ஆளுநர் சவால்

click me!