
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பாஜக செயலாளராக செயல்படுபவர் ரவீந்திர பாவ்நந்தடே. இவர் இளம்பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டு நெருங்கி பழகி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 27ம் தேதி, அந்த இளம்பெண் தனியார் சொகுசுபேருந்தில் கட்சிரோலியில் உள்ள நாக்பிட் என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருந்தார்.
அதே பேருத்தில் ரவீந்திர பாவ்நந்தடேயும் பயணம் செய்தார். அப்போது ரவீந்திர பாவ்நந்தடே, திடீரென சக பயணிகள் முன்னிலையில், அந்த இளம்பெண்ணைகட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதை பார்த்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சி பஸ்சில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
கேமராவில் பதிவான காட்சிகள் தற்பபோது யு டியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், கட்சிரோலி போலீசில் புகார் செய்தார்.தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளம்பெண் மனு அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பாஜக பிரமுகரை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த பாஜக பிரமுகர் ரவீந்திர பவன்தடேவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.