Heeraben Modi:PM Modi: கடினமான நேரத்தில் என் அன்பும்,ஆதரவும் இருக்கும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி ஆதரவு

By Pothy RajFirst Published Dec 28, 2022, 4:54 PM IST
Highlights

கடினமான நேரத்தில் என் அன்பும், ஆதரவும் உங்களுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை பாதி்க்கப்பட்டநிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கடினமான நேரத்தில் என் அன்பும், ஆதரவும் உங்களுக்கு இருக்கும் என்று பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை பாதி்க்கப்பட்டநிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

 

एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।

मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।

— Rahul Gandhi (@RahulGandhi)

யுஎன் மேத்தா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் “ பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா இதயநோய் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்த பிரதமர் மோடி அவசரமாக டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு தற்போது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை அனைவரும் பயன்படுத்தலாமா?

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ ஒரு தாய்க்கும், மகனுக்குமான அன்பு விலைமதிப்பற்றது, முடிவில்லாதது. மோடிஜி என்னுடைய அன்பும், ஆதரவும் இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கு இருக்கும். உங்கள் தாய் விரைவில் நலம்பெற்று திரும்புவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

 

प्रधानमंत्री श्री जी की माता जी के अस्वस्थ होने का समाचार प्राप्त हुआ। इस घड़ी में हम सब उनके साथ हैं।

मैं ईश्वर से प्रार्थना करती हूं कि उन्हें जल्द स्वास्थ्य लाभ मिले।

— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடியின் தாய் விரைவில் குணமடைய வேண்டும்.இந்த நேரத்தில் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 2வது கட்ட சட்டசபைத் தேர்தல் நடந்தபோது வாக்களிக்க பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அவரின் தாயார் 100வயதான தனது ஹீராபென் மோடியைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி அகமதாபாத் பயணம்: தாய் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதி:

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி அவரின் குடும்பத்தினர் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பந்திப்பூர் சரணாலயத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் மைசூரு அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரஹலாத் மோடி அவரின் குடும்பத்தினருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன, அவரின பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!