Covid Nasal Vaccine:மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை அனைவரும் பயன்படுத்தலாமா?
கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தை யார் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தை யார் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்குவழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவாக்(incovacc) அறிமுகப்படுத்தியிருந்தது. இன்கோவாக் தடுப்பு மருந்து அரசுக்கு அதிகக் கொள்முதலின்போது ரூ.325க்கும், தனியார் மருத்துவமனைகள், தனியாருக்கு விற்பனை செய்யும் போது ஒரு டோஸ் ரூ.800 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோவின் தளத்திலும் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு, அத்துமீறல்!அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்
இன்கோவாக் தடுப்பு மருந்தை 18வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த மருந்தை பூஸ்டர் டோஸாக பயன்படுத்தலாம். முதல் இரு தடுப்பூசிகள் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி இருந்தாலும், இந்த இன்கோவாக் தடுப்பு மருந்தை பூஸ்டர் டோஸாக மூக்குவழியாக எடுக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனாலும், யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் தடுப்பூசிக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் மூக்குவழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை யார் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை 18வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் பூஸ்டர் டோஸாகப் பயன்படுத்தலாம். அதாவது, முதல்முறையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துபவர்கள் மட்டும் செலுத்தலாம். ஏற்கெனவே பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்கள் இந்த மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தை செலுத்தக்கூடாது.
பாரத் பயோடெக்கின் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து விலை என்ன?
இந்தியாவில் வைரஸ் தடுப்பு மருந்தை பலப்படுத்தும் வகையில் புதிதாக அடுத்தடுத்து தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இப்போதுவரை அனைவருக்கும் 3 டோஸ்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அதாவது முதல் இரு தடுப்பூசிகளுக்குப்பின், 3வதாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.அந்த பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக மூக்குவழி செலுத்தப்படும் மருந்தைப் பயன்படுத்தலாம். ஆனால், 3 டோஸ் செலுத்தியவர்கள், 4வதாக இந்த மருந்தை பயன்படுத்த முடியாது, கோவின் தளமும்4வது டோஸ் செலுத்த அனுமதிக்காது.
ஒரு தனிநபர் ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜென்னுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்று வந்தால், காலப்போக்கில், அந்த நோய் எதிர்ப்புச் சக்தி செயல்படாமல் போகலாம். அதனால்தான் ஆர்என்ஏ தடுப்பூசிகள் 6 மாத இடைவெளியில் செலுத்தப்படுகின்றன.
இந்த நேரத்தில் 4வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையில்லை,அதற்கு அவசியமும் இல்லை
இன்கோவாக் தடுப்பு மருந்து மூக்கு, வாய்வழியாக நுரையீரலுக்குச் சென்று நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும், இதன் மூலம் இந்த வழியாக நோய் தொற்று செல்லவிடாமல் தடுக்கும். கோவிட் வைரஸ் மட்டுமின்றி, நுரையீரலைப் தாக்கும் அனைத்து வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும்
Bharat Biotechக்கின் ஊசியில்லா, மூக்குவழி கொரோனா தடுப்பூசி இன்று அறிமுகம்: யார் பயன்படுத்தலாம்?
18வயதுக்கு மேற்பட்டவர்கள், பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தை எடுக்கலாம். ஒவ்வொரு நாசித்துவாரத்திலும் 4 சொட்டுகள் விட வேண்டும். தடுப்பு மருந்து செலுத்தியபின் 15 முதல் 30 நிமிடங்கள் காத்திருந்து, வேறு எந்த பக்கவிளைவும் இல்லை எனத் தெரிந்தபின் செல்லலாம். இந்த மருந்து முற்றிலும் பாதுகாப்பானது ” எனத் தெரிவித்தார்