பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு முறைப்படி பாதுகாப்பு வழங்குங்கள், பல இடங்களில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு முறைப்படி பாதுகாப்பு வழங்குங்கள், பல இடங்களில் பாதுகாப்பு அத்துமீறல் நடந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை டெல்லிக்குள் வந்தபின், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அத்துமீறல், குறைபாடு இருந்ததாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
Heeraben Modi: PM Modi Mother: பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி மருத்துவமனையில் அனுமதி
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதுவரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா வழியாக டெல்லி சென்றுள்ளது.
அடுத்ததாக ஜனவரி 3ம் தேதி 2வது கட்டமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையைத் தொடங்கி, ஹரியானா, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் சென்று அடைய உள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா என்ற சித்தாந்தத்தின் மீது தாக்குதல்!காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை சனிக்கிழமை டெல்லிக்குள் வந்தபின் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடும், அத்துமீறல்களும் நடந்தன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸார், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ராகுல் காந்தியை விட்டு குறிப்பிட்ட தொலைவு யாரையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தவறிவிட்டார்கள். ராகுல் காந்தி இசட்பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்.
இதனால் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், ராகுல் காந்தியைச் சுற்றி அரணாக இருந்து அவருக்கு அருகே யாரும் வரவிடாமல் தடுத்தார்கள். ஆனால், டெல்லி போலீஸார் இதை பார்த்துக்கொண்டு மவுனமான பார்வையாளர்களாக நின்று இருந்தார்கள்.
இந்த யாத்திரையில் பங்கேற்றவர்களிடம் புலனாய்வுத்துறையும் விசாரணை நடத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த உளவுத்துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர் அனுமதியில்லாமல், பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கான கண்டெய்னரில் ஏறி சோதனையிட்டுள்ளார்கள்.
இந்திய எல்லைக்குள் சுதந்திரமாகச் செல்ல அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு. பாரத் ஜோடோ யாத்திரை அமைதியை, தேசத்தில் ஒற்றுமையைக் கொண்டு வருகிறது.மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல், காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பையும், போலீஸ் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
ரயில்வேயில் 3 கோடி பயணிகளின் விவரங்கள் திருட்டு!ஹேக்கர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறல்
அடுத்தகட்டமாக பாரத் ஜோடோ யாத்திரை, பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்குள் செல்கிறது. இந்த நேரத்தில் உங்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்பது, உடனடியாக நடவடிக்கை எடுத்து,ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவருடன் சேர்ந்து நடக்கும் தொண்டர்கள் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.