Heeraben Modi: PM Modi Mother: பிரதமர் மோடி அகமதாபாத் பயணம்: தாய் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதி:

By Pothy Raj  |  First Published Dec 28, 2022, 1:52 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக டெல்லியிலிருந்து ்அகமதாபாத் புறப்பட்டார். 


பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக டெல்லியிலிருந்து ்அகமதாபாத் புறப்பட்டார். 

ஹீராபென் மோடிக்கு தற்போது 100 வயதாகிறது. இம் மாதம் நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் கூட ஹீராபென் மோடி சர்க்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். 

Tap to resize

Latest Videos

இந்தியா என்ற சித்தாந்தத்தின் மீது தாக்குதல்!காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு

இந்நிலையில் ஹீராபென்மோடிக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று ஹீராபென் மோடி அனுமதிக்கப்பட்டார். 

இந்த தகவல் அறிந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், தலைமைச் செயலாளர் கைலாசநாதன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

குஜராத்தில் 2வது கட்ட சட்டசபைத் தேர்தல் நடந்தபோது வாக்களிக்க பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அவரின் தாயார் ஹீராபென் மோடியைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Heeraben Modi, mother of Prime Minister Narendra Modi is admitted at UN Mehta Institute of Cardiology & Research Centre in Ahemdabad and her health condition is stable, says the hospital pic.twitter.com/D6N4PF2FGC

— ANI (@ANI)

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி அவரின் குடும்பத்தினர் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பந்திப்பூர் சரணாலயத்துக்கு சென்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் மைசூரு அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரஹலாத் மோடி அவரின் குடும்பத்தினருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன, அவரின பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் முடிந்த 2 நாளில் கர்நாடகாவில் தேவாலாயம் சூறை!குழந்தை இயேசு சிலை உடைப்பால் பதற்றம்

யுஎன் மேத்தா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் “ பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி யுஎன் மேத்தா இதயநோய் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தனது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ்அறிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக டெல்லியிலிருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்டார் என்று டெல்லி வட்டரங்கள் தெரிவிக்கின்றன. 

 

click me!