இனி முன்பதிவு தேவையில்லை..’சூப்பர்’ நியூஸ் சொன்ன ரயில்வே !!

By Raghupati RFirst Published Apr 15, 2022, 12:14 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் சூப்பர் ஃபாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் மீண்டும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இவைகளில், டிக்கெட் முன்பதிவு செய்யாமல் நேரடியாக ஸ்டேஷனில் டிக்கெட் பெற்று பயணிகள் பயணிக்க முடியும்.

நாளை (16ம் தேதி) முதல், பத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில், பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால், சூப்பர்பாஸ்ட், எக்ஸ்பிரஸ் ரயில்களில் மீண்டும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்யாமல், நேரடியாக ஸ்டேஷனில் டிக்கெட் பெற்று, பொது பெட்டிகளில் பயணிகள் பயணிக்க முடியும்.

நாளை முதல் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (சேது சூப்பர்பாஸ்ட் ரயில்), சென்னை - மங்களூரு (மங்களூரு சூப்பர்பாஸ்ட்), சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட்), சென்னை எழும்பூர் - மதுரை (பாண்டியன் எக்ஸ்பிரஸ்), சென்னை - மங்களூரு (சென்னை மெயில்), திருவனந்தபுரம் - சென்னை (திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட்), சென்னை எழும்பூர் - செங்கோட்டை (பொதிகை சூப்பர்பாஸ்ட்), சென்னை - ராமேஸ்வரம் (போர்ட்மெயில்), சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (நெல்லை சூப்பர்பாஸ்ட்), நாகர்கோவில் - கோவை ஆகிய பத்து ரயில்களில் பொது பெட்டி இணைக்கப்படுகிறது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ’சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்களில், 192 ரயில்களில் பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியானது. இதுவரை, 102 ரயில்களில் பொதுப்பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் மேலும், 86 ரயில்களில் பொதுப்பெட்டி இணைக்கப்படும்’ என்றனர்.

இதையும் படிங்க : பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நண்பருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த நண்பர்கள்.. வேற மாதிரி சம்பவம் !

click me!