
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென இடமாற்றம் செய்து முதல்வர் ஆதித்யநாத் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான லக்னோ மேம்பாட்டு அதிகாரி சத்யேந்திர சிங் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் பா.ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கோரக்பூர் எம்.பி. யோகிஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை, அதிகாரிகளுக்கு ஒழுக்க நெறி, அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி விதமுறைகள் அறிவித்து மிரள வைத்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வராக பதவி ஏற்று ஒருமாதம் நேற்றோடு முடியும் நிலையில், நேற்று மிகப்பெரிய அதிகாரிகள் மாற்றத்துக்கு ஆதித்யநாத்உத்தரவிட்டார்.
இதற்கு முன் கடந்த 12-ந்தேதி சிறிய அளவில் மட்டுமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஆனால், நேற்று ஊழல்கறை படிந்தவர்கள், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றப்பட்டனர்.
இதில் குறிப்பாக லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்சத்தியேந்திர சிங் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. இதையடுத்து அவர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
மேலும், அகிலேஷ் யாதவ் ஆட்சிக் காலத்தில் முதன்மைச் செயலாளராக இருந்த நவநீத் சேஹல் மாற்றப்பட்டு, ஆத்தியநாத் வேண்டுகோளின் பெயரில் மத்திய பணியில்இருந்த அவனிஷ் குமார் அஸ்வதி அழைக்கப்பட்டு அந்தபொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
யமுனா விரைவுசாலை மற்றும் யமுனா விரைவுசாலை தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக பிரகாத் குமார் நியமிக்கப்பட்டார்.