
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் புது புது தொழில் நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்தியா நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது .
இந்நிலையில்,சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள ’Vistadome Coaches’ என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக உள்ள இந்த ரயில் பெட்டி, கடந்த 16-ம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக இந்த கண்ணாடி ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்ணாடி ரயில் பெட்டியானது, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய கண்ணாடி ரயில் பெட்டியை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கொடியசைத்து திறந்து வைத்தார். பின்னர் இந்த கண்ணாடி பெட்டியின் சிறப்பை பற்றி பெருமையாக பேசினார்.
தொழில் நுட்பத்தில், இந்தியா முன்னேறி வருவதை இந்த கண்ணாடி ரயில் பெட்டியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்