
ஜாதி அரசியலுக்கு சவுக்கடி கொடுக்கப்படும் …லக்னோவில் முழங்கிய யோகி ஆதித்யநாத்…
இந்தியாவில் ஜாதிய அரசியலுக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், நாட்டின் முன்னேற்றம், தேச பக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அவர் பதவியேற்றது முதல் ஏராளமான அதிரடி உத்தரவிகளை பிறப்பித்து வருகிறார். விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
தொடர்ந்து அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்கவும், அரசு அலுவலர்கள் தாமதமாக வந்தால் கடும் நடவடிக்கை என பல் அதிரடிகளை நடைமுறைப்படுத்தினார்.
இந்நிலையில் ஜாதிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, யோகி பேசியுள்ளார்.
;லக்னோவில், இரண்டு நாட்கள் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில், பேசிய யோகி ஆதித்யநாத் , நாட்டின் முன்னேற்றத்தில், பாஜக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஜாதியை வைத்து அரசியல் செய்யும் நடைமுறை, முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளிவைக்கப்படும், என்றும் தெரிவித்த யோகி, நாட்டின் முன்னேற்றம் மற்றும் தேச பக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
யோதி ஆதித்யநாத்தின் இந்த அதிரடி பேச்சு பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.