
ஜம்மு காஷ்மீரில் வங்கிக்கு பணம் எடுத்து சென்ற வேன் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 போலீஸ் மற்றும் 2வங்கி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வேன் மூலம் பணம் ஏற்றி வந்து இறக்குவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் இன்றும் வேனில் பணம் ஏற்றிக்கொண்டு வங்கி ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர்.
அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென வேனின் மீது துப்பாக்கி சூடு நடத்தி வங்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது தடுக்க முயன்ற போலீசார் மற்றும் வங்கி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 5 போலீஸ் மற்றும் 7 வங்கி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.