எம்பியை ஆபாசப்படம் எடுத்த பெண்ணுக்கு வலை - ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக புகார்

 
Published : May 01, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
எம்பியை ஆபாசப்படம் எடுத்த பெண்ணுக்கு வலை - ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக புகார்

சுருக்கம்

girl caught mp scandal and threatened

குளர்பானத்தில் மயக்க மருத்து கலந்து கொடுத்து, தன்னை ஆபாச படம் எடுத்து ரூ.5 கோடி கேட்டு ஒரு பெண் மிரட்டுவதாக எம்பி கே.சி.பட்டேல் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

எம்பி ஒருவர், டெல்லி கமிஷனர் அலுவலகத்தில், எம்பி கே.சி.பட்டேல் புகார் கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு ஒரு பெண், என்னிடம் உதவி கேட்டு மனு கொடுத்தார். அதன்பின் அடிக்கடி என்னை அந்த பெண் தொடர்பு கொண்டார்.

இதைதொடர்ந்து காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார்.  அங்கு அவர் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இருந்தார். அதை அறியாமல் நான் குடித்ததால், மயங்கிவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தபோது, அந்த பெண்ணும், அவருடன் சிலரும் இருந்தனர். அப்போது அந்த பெண், என்னிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால், நான் மயங்கிய நிலையில் இருந்தபோது, எடுத்த ஆபாச படங்கள், வீடியோவை வெளியே பரபரப்பிவிடுவேன் என மிரட்டினர்.

அதேபோல், இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்து, போலீசில் பொய் புகார் அளிப்போம் என்றும் அவர்கள் மிரட்டினார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரை விசாரித்த சிறப்பு கமிஷனர் முகேஷ்மீனா, வழக்குப்பதிவு செய்து, மர்ம பெண்ணை தேடி வருகிறார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு, இதே பெண் மற்றொரு எம்பி மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் பொய் என போலீசாருக்கு தெரிந்ததும், அவர் தலைமறைவாகிவிட்டார் என்றனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்