ராஜிவ் கொலை வழக்கில் இத்தனை ஆண்டுகளாக என்ன விசாரணை நடந்தது? - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

First Published May 1, 2017, 1:14 PM IST
Highlights
whats happening in rajiv murder case supreme court condemns cbi


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பின்னரும், அவர்கள் 7 பேரும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ராஜிவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில் இதுவரை என்ன நடந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் ஆனதாற்கு என்ன காரணம் என சிபிஐயிடம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ராஜிவ் காந்தி கொலை வழக்கு எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது. ஏன் தாமதம். இந்த வழக்கில் இதுவரை விசாரித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன. எப்போது முடியும் என சரமாரி கேள்களை எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த சிபிஐ, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அனைவரும் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடாமல், வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பிடத்தக்கது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் வெளிநாட்டில் உள்ளனர். இதனால், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது.

அதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், கொலை வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் எப்போது இந்தியாவுக்கு வருவார்கள். அவர்களிடம் என்ன விசாரணை நடத்தப்படும். இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் அனைத்து 4 வாரங்களில் அறிக்கையாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை, எதிர் மனு தாரரான பேரறிவாளன் தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றனர்.

click me!