"இறைவன் முன் அனைவரும் சமம் என போதித்தவர் ராமானுஜர்" - தபால் தலை வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்...

First Published May 1, 2017, 4:58 PM IST
Highlights
postal stamp for ramanujar


இறைவன் முன் அனைவரும் சமம் என போதித்தவர் ராமானுஜர் என்றும், தனக்கு கிடைத்த நற்சிந்தனைகளை பிறருக்கு பகிர்ந்தவர் என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  

ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் வெளியிட்டார். 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு ராமானுஜரின் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது :

ஒன்பதாவது நூற்றாண்டை சேர்ந்தவர் ராமானுஜர். தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த இவர் மனிதர்கள் அனைவரும் இறைவன் முன் சமமானவர்கள் என உலகிற்கு தெரிவித்தவர்.

தனக்கு கிடைத்த நற்சிந்தனைகளை பிறருக்கு தெரிவித்தவர். மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர் ராமானுஜர்.

பின்தங்கிய மக்களை முன்னேற்ற முயற்சித்தவர். ஏழைகள், நலிந்த பிரிவினருக்கு ராமானுஜர் வழிகாட்டியாக திகழ்ந்தார். பழங்காலத்திலேயே பல இன மக்களை கோயிலில் நியமித்தவர்.

சமுதாயம், மதம், தத்துவத்தை உள்ளடக்கியதே ராமானுஜரின் வாழ்க்கை. ஏழைகளுக்கு உணவு, மருந்து கிடைக்கும் இடமாக கோயிலை மாற்றியவர். வைணவத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ராமானுஜர்.

இவ்வாறு புகழாராம் சூட்டினார் மோடி.

click me!