2023-ல் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட செய்திகள், நபர்கள், படங்கள், உணவுகள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ..

By Ramya s  |  First Published Dec 12, 2023, 1:23 PM IST

2023-ல் இந்திய பயனர்கள் கூகுளில் அதிகமாக தேடிய செய்திகள், திரைப்படங்கள், உணவுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த ட்ரெண்டிங் தேடல் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 


2023-ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் 2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், நிகழ்வுகள், திரைப்படங்கள், மீம்கள் போன்ற விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 மற்றும் ChatGPT போன்ற பரிச்சயமான தலைப்புகள் குறித்து பலரும் தேடினாலும் பூபேந்திர ஜோகி, G20 குறித்தும் தெரிந்துகொள்ள பல தகவல்களை இந்திய பயனர்கள் அதிகமாக தேடியுள்ளனர் என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது.

அந்த வகையில் 2023-ல் இந்திய பயனர்கள் கூகுளில் அதிகமாக தேடிய செய்திகள், திரைப்படங்கள், உணவுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த ட்ரெண்டிங் தேடல் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள், நிகழ்வுகள் :

  • சந்திரயான்-3
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்
  • இஸ்ரேல் செய்திகள்
  • சதீஷ் கௌசிக்
  • பட்ஜெட் 2023
  • துருக்கி நிலநடுக்கம்
  • அதிக் அகமது
  • மேத்யூ பெர்ரி
  • மணிப்பூர் செய்திகள்
  • ஒடிசா ரயில் விபத்து

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவில் 2023ல் அதிகம் தேடப்பட்ட நபர்கள்

  • கியாரா அத்வானி
  • சுப்மன் கில்
  • ரச்சின் ரவீந்திரன்
  • முகமது ஷமி
  • எல்விஷ் யாதவ்
  • சித்தார்த் மல்ஹோத்ரா
  • கிளென் மேக்ஸ்வெல்
  • டேவிட் பெக்காம்
  • சூர்யகுமார் யாதவ்
  • டிராவிஸ் ஹெட்

2023 இல் அதிகம் தேடப்பட்ட OTT நிகழ்ச்சிகள்

  • ஃபார்ஸி
  • வெட்னெஸ்டே
  • ஆசுர்
  • ராணா நாயுடு
  • தி லாஸ்ட் ஆஃப் அஸ்
  • ஸ்கேம் 2003
  • பிக் பாஸ் 17
  • கன்ஸ் அண்ட் குலாப்ஸ்
  • செக்ஸ்/லைஃப்
  • தாசா கபார்

2023-ல் அதிகம் தேடப்பட்ட படங்கள்

  • ஜவான்
  • கடார்
  • ஓப்பன்ஹைமர்
  • ஆதிபுருஷ்
  • பதான்
  • தி கேரளா ஸ்டோரி
  • ஜெயிலர்
  • லியோ
  • டைகர் 3
  • வாரிசு

2023 இல் அதிகம் தேடப்பட்ட சுற்றுலா இடங்கள்

  • வியட்நாம்
  • கோவா
  • பாலி
  • இலங்கை
  • தாய்லாந்து
  • காஷ்மீர்
  • கூர்க்
  • அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  • இத்தாலி
  • சுவிட்சர்லாந்து

சந்திரயான் முதல் ஒடிசா ரயில் விபத்து வரை.. 2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள் லிஸ்ட் இதோ..

2023-ல் அதிகம் தேடப்பட்ட கேள்விகள்

  • G20 என்றால் என்ன?
  • பொது சிவில் சட்டம் (UCC) என்றால் என்ன?
  • சேட் ஜிபிடி என்றால் என்ன?
  • ஹமாஸ் என்றால் என்ன?
  • 28 செப்டம்பர் 2023 அன்று என்ன?
  • சந்திரயான் 3 என்றால் என்ன?
  • Instagram இல் த்ரெட்ஸ் என்றால் என்ன?
  • கிரிக்கெட்டில் Timed Out என்றால் ?
  • ஐபிஎல்லில் இம்பேக்ட் வீரர் என்றால் என்ன?
  • செங்கோல் என்றால் என்ன?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட “எப்படி ” என்ற கேள்விகள்

  • வீட்டு வைத்தியம் மூலம் சருமம் மற்றும் முடிக்கு சூரியனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி?
  • YouTubeல் எனது முதல் 5,000 பின்தொடர்பவகளை எப்படி அடைவது?
  • கபடியில் சிறந்து விளங்குவது எப்படி?
  • கார் மைலேஜை எப்படி மேம்படுத்துவது?
  • செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி
  • ரக்‌ஷ பந்தனில் என் சகோதரியை எப்படி ஆச்சரியப்படுத்துவது?
  • உண்மையான காஞ்சிவரம் பட்டுப் புடவையை அடையாளம் காண்பது எப்படி?
  • ஆதாருடன் பான் இணைப்பை எவ்வாறு சரிபார்க்கலாம்?
  • வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது எப்படி?
  • இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி?

2023-ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள்

  • மாங்காய் ஊறுகாய்
  • செக்ஸ் ஆன் தி பீச்
  • பஞ்சாமிர்தம்
  • ஹகுசாய்
  • தனியா பஞ்சிரி
  • கரஞ்சி
  • திருவாதிரை களி
  • உகாதி பச்சடி
  • கொழுக்கட்டை
  • ரவா லட்டு
click me!