எனக்காக எதையும் நான் கேட்டுப் பெறமாட்டேன் என்றும் அதற்குப் பதிலாக என் உயிரையே விட்டுவிடுவேன் என்றும் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் புதிய முதல்வராக மோகன் யாதவை தேர்வு செய்த பாஜக தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்வதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் பதவிக்கு மோகன் யாதவை பாஜக தலைமை திங்கள்கிழமை தேர்வு செய்தது. உஜ்ஜைன் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் சிவராஜ் சிங் சௌகானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அறியப்படுபவர்.
undefined
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசியுள்ள காபந்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், "மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்... முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில், மத்தியப் பிரதேசம் புதிய உயரங்களை எட்டும். அவருக்கு என் ஆதரவைக் கொடுப்பேன்" தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளாக தனது தலைமையிலான அரசு பல சாதனைகளைப் படைத்துள்ளது என்றும் மத்தியப் பிரதேச மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் சௌகான் பெருமிதம் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் புதிய முதல்வராகும் பிரமாணர்! பஜன்லால் சர்மா யார்? பாஜகவில் அவர் சாதித்தது என்ன?
சிவராஜ் சிங் சௌகான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர், அது வெறும் கற்பனை என்றும் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறினார். பெரிய பணிகளைச் செய்ய உறுதியுடன் இருப்பதாவும் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
"நீங்கள் டெல்லிக்குச் செல்வீர்களா என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை மிகவும் பணிவோடு சொல்கிறேன். எனக்காக எதையும் நான் கேட்டுப் பெறமாட்டேன். அதற்குப் பதிலாக என் உயிரையே விட்டுவிடுவேன். அது என் வேலை இல்லை. அதனால்தான் நான் டெல்லிக்குச் செல்லமாட்டேன் என்று கூறியிருந்தேன்” என்று அவர் எடுத்துரைத்தார்.
மேலும், "பாஜக 18 ஆண்டுகளாக ஒரு சாதாரண தொழிலாளியை முதல்வராக வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளில் அப்படி யாரையும் பார்க்க முடியவில்லை. கட்சி எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது. இப்போது பதிலுக்கு நான் கட்சிக்குத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் சவுகான் கூறினார்.
முன்னதாக, சவுகான் கட்சியின் பெண் ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடினார். சவுகானைப் பார்த்ததும் கண்ணீர் மல்கிய தொண்டர்களுக்கு சௌகான் ஆறுதல் கூறினார்.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான பாஜக 163 தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆட்சியைப் பிடிக்க முயன்ற காங்கிரஸ் 66 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா அறிவிப்பு; வசுந்தரா ராஜேவுக்கு வாய்ப்பு மறுப்பு!