பஜன் லால் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 1.5 கோடி. இதில், அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.43.6 லட்சம். அசையா சொத்துகள் மதிப்பு ரூ.1 கோடி. மொத்த வருமானம் ரூ.11.1 லட்சம். அதில் தனிநபர் வருமானம் ரூ.6.9 லட்சம்.
ராஜஸ்தானில் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆகியிருக்கும் பஜன் லால் சர்மா புதிய முதல்வராக பதவியேற்க இருக்கிறார் என்று பாஜக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. சங்கனர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான பஜன் லால் சர்மா, கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக நான்கு முறை தேர்வானவர்.
நடந்து முடிந்த 2023 ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கனர் தொகுதியில் காங்கிரஸின் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் போது கட்சியின் ஆதரவை விரிவுபடுத்துவதில் சர்மா முக்கியப் பங்காற்றினார் என்றும் அது பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் பல உள்ளூர் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
undefined
கட்சி சார்ந்த செயல்பாடுகளில் சர்மா, செல்வாக்கான மனிதர் என்று பரவலாகக் கருதப்படுகிறார். 56 வயதாகும் முதுகலை பட்டதாரியான சர்மா தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ரூ.1.5 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா அறிவிப்பு; வசுந்தரா ராஜேவுக்கு வாய்ப்பு மறுப்பு!
அசையும் சொத்துக்கள் ரூ.43.6 லட்சமும், அசையா சொத்துகளாக ரூ.1 கோடியும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மொத்த வருமானம் ரூ.11.1 லட்சம் என்றும் அதில் தனிநபர் வருமானம் ரூ.6.9 லட்சம் என்றும் கூறியிருக்கிறார்.
முன்னதாக, ராஜஸ்தான் முதல்வரைத் தேர்வு செய்வதற்கான பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. அதில், கட்சியின் தேர்தல் பார்வையாளர்கள் வினோத் தாவ்டே மற்றும் சரோஜ் பாண்டே ஆகியோரும் கலந்துகொண்டனர். மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும் ராஜஸ்தான் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷியும் பங்கேற்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்று தெரியாமல் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், 2013 முதல் 2018 வரை பாஜக ஆட்சியில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நிலவியது.
ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்க கூகுள் தாராவுடன் கைகோர்க்கும் ஏர்டெல்! ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆப்பு தான்!
ஆனால், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராஜஸ்தான் பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, பஜன்லால் சர்மாவை சட்டமன்றக் கட்சியின் தலைவராக முன்மொழிந்தார். அனைவரும் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்" என்றார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதால் கரன்பூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனார். 200 சட்டமன்றத் தொகுதிகளில் 199 இடங்களுக்கு நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 199 இடங்களில் பாஜக 115 இடங்களிலும், காங்கிரஸ் 69 இடங்களிலும் வெற்றி பெற்றன.
2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களையும், பாஜக 73 இடங்களையும் வென்றிருந்தன. பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் முதல்வர் ஆனார்.
பாலஸ்தீன மக்களை கண்ணைக் கட்டி நிர்வாணமாகக் கூட்டிச் சென்ற இஸ்ரேல் ராணுவம்!