கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் முன்னிட்டு பாகிஸ்தான் தேசியக் கொடி சர்ச்சை; லுலு குழுமம் மறுப்பு!!

By Asianet TamilFirst Published Oct 11, 2023, 12:54 PM IST
Highlights

கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக தொங்கவிடப்பட்ட கொடிகள் தொடர்பான பிரச்சாரங்கள் போலியானவை என லுலு குழுமம் தெரிவித்துள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளில் கொச்சி லுலு மாலில் அந்தந்த நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டன. இதுகுறித்து லுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது குறித்து பரப்பப்படும் சில பொய்யான விஷயங்கள் உண்மைகளை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தின் மைய கட்டிடத்தில் இருந்து பல்வேறு நாடுகளின் கொடிகள் ஒரே மட்டத்தில் கீழே தொங்கவிடப்பட்டன. கொடிகளை மேலே இருந்து புகைப்படம் எடுக்கும்போதும், பாதையின் ஓரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும்போதும் அந்தந்தப் பக்கத்தில் உள்ள கொடிகள் பெரிதாகத் தோன்றும், ஆனால் கீழே இருந்து புகைப்படம் எடுக்கும் போது, ​​எல்லாமே சம அளவில் இருப்பது புரியும்.

இந்திய கொடியை விட பெரிதாக வைக்கப்பட்ட பாகிஸ்தான் கொடி.. பரபரப்பை கிளப்பிய கேரளா லூலூ மால் - என்ன நடந்தது?

ஆனால், பாகிஸ்தானின் கொடி பெரியதாக தொங்கவிடப்பட்டு இருந்ததாகவும், இந்தியக் கொடி சிறியதாக தொங்கவிடப்பட்டு இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட பக்கத்திலிருந்து பார்க்கும்போது ஒவ்வொரு நாட்டின் கொடியும் பெரிதாகத் தெரிவது இயல்பானது என்றாலும், பாகிஸ்தானிய கொடிக்கான அளவு பெரியது என்பது முற்றிலும் தவறானது. மேலும் தவறான செய்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற தவறான பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று லுலு குழுமம் கேட்டுக் கொண்டுள்ளது.

பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட தீவிரவாதி ஷாகித் லடிஃப் சுட்டுக்கொலை

click me!