பதான்கோட் தாக்குதலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட தீவிரவாதி ஷாகித் லடிஃப் சுட்டுக்கொலை

இந்தியாவை உலுக்கிய பதான்கோட் தாக்குதலில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஷாகித் லடிஃப் என்கிற தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்.

mastermind of Pathankot attack Shahid Latif killed in Pakistan gan

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தது நாட்டையே உலுக்கியது. இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது. இருப்பினும் அதற்கு முக்கியப் புள்ளியாக இருந்த பயங்கரவாதிகள் தப்பிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு முக்கியப் புள்ளியாக இருந்த ஷாகித் லடிஃப் என்கிற பயங்கரவாதி பாகிஸ்தானில் உள்ள சைல்கோட்டில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். ஷாகித் லடிஃப், ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜம்முவில் போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அவர், 2010ம் ஆண்டு வாகா எல்லை வழியாக நாடு கடத்தப்பட்டார். இதையடுத்து அவரது செயல்பாடுகள் நீண்ட காலமாக இந்திய பாதுகாப்பு படையினரால் கவனிக்கப்பட்டு வந்தது. ஷாகித் லடிஃப்பின் மறைவு, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான சக்தியாக உள்ளது: IMF அறிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து

vuukle one pixel image
click me!
vuukle one pixel image