
கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் அமைந்துள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் SFI அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அத்துடன் அங்குள்ள ஊழியர்களையும் மிரட்டியச் சென்றனர். வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி அளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து கொச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், கொச்சி, திருச்சூர், கன்னூர் உள்ளிட்ட கேரளாவில் பல இடங்களில் இத்தாக்குதலைக் கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கைது! குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற போலீஸ்!
“சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, ஊடக நிறுவனத்தின் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு சட்டசபை எதிர்ப்பு தெரிவிப்போம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீசன் கூறியுள்ளார்.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.ஜெயராஜன், தனக்கு இந்தச் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று கூறினார். அவரிடம் விசாரித்தபோது, "சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரித்து பின்னர் கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பத்திரிக்கை சுதந்திரம் என்றால், என்ன வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் என்று புரிந்துகொள்ளக் கூடாது. நாங்கள் எப்போதும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வாதிடும் கட்சி. ஆனால் ஒருவரது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் சிலர் செய்தி வெளியிடுகிறார்கள். எல்லோரும் அப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை. சில ஊடகங்கள் அப்படித்தான் செயல்படுகின்றன. ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன, இது சரியான பத்திரிகை அல்ல." என்று கூறினார்.
இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீதான கறை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். "முதல்வர் பினராயி விஜயன் நரேந்திர மோடியைப் பின்பற்றுவது போல இருக்கிறது. இருவருக்கும் ஒரே இலக்கு; ஒரே பாதையில் பயணிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். "முதல்வருக்கு எதிராக வெளிப்படையாக எழுதுபவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
Makeup Disaster: மேக்கப் போட்டதால் அலங்கோலமான முகம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்!