Makeup Disaster: மேக்கப் போட்டதால் அலங்கோலமான முகம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்!

Published : Mar 04, 2023, 11:45 AM ISTUpdated : Mar 04, 2023, 12:05 PM IST
Makeup Disaster: மேக்கப் போட்டதால் அலங்கோலமான முகம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்!

சுருக்கம்

கர்நாடகாவில் பியூட்டி பார்லரில் திருமண மேக்கப் செய்துகொள்ள சென்ற பெண்ணுக்கு முகம் கறுத்து வீங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

கர்நாடகாவில் திருமணத்துக்கு முன் பியூட்டி பார்லருக்குச் சென்றதால் ஒரு பெண்ணின் திருமணமே நின்றுபோகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நடாக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே என்ற கிராமத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்குத் தயார் ஆகும் வகையில் அந்தப் பெண் அலங்காரம் செய்துகொள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றுள்ளார். பியூட்டி பார்லரில் அவர் எடுத்துக்கொண்ட ஸ்டீம் சிகிச்சைக்குப் பின் அவரது முகம் கறுத்துவிட்டது.

முகம் கறுப்பாகி, வீங்கிய நிலையில் இருந்த மணப்பெண்ணைப் பார்த்தது, மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார். இதனை அடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்காக புதுமையாக ஒன்றை முயற்சிக்க விரும்பிய அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Bill Gates: கோவின் திட்டம் உலகத்துக்கே முன்மாதிரியானது - பிரதமர் மோடியைச் சந்தித்த பில் கேட்ஸ் பாராட்டு

குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் இந்த கதிக்குக் காரணமான பியூட்டி பார்லரின் உரிமையாளர் கங்கா மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் கவிதாவை வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

அண்மையில்,   ஹைதராபாத்தில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை யாக பழைய பர்னீச்ச்ரைக் கொடுத்தாகக் கூறி மணமகன் வீட்டார் திருமணத்தையே நிறுத்தியதாக செய்தி வெளியானது. மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக பர்னீச்சர்கள் உள்ளிட்ட பல பொருட்களை எதிர்பார்த்துள்ளனர். ம ணமகளின் குடும்பத்தினரால் கொடுக்கப்பட்ட பொருட்கள் புதியவையாக இல்லாமல் ஏற்கெனவே பயன்படுத்தியவையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மணமகனின் குடும்பத்தினர் அவற்றை ஏற்க மறுத்து, திருமணத்துக்கு வராமல் இருந்துவிட்டனர்.கர்நாடகாவில் பியூட்டி பார்லரில் திருமண மேக்கப் செய்துகொள்ள சென்ற பெண்ணுக்கு முகம் கறுத்து வீங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

M K Stalin Camel: முதல்வருக்கு பரிசளித்த ஒட்டகத்தின் கதி இதுதானா! விலங்கின ஆர்வலர்கள் கவலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!