சறுக்குவழி, நாளொன்றுக்கு 3 குண்டு வெடிப்பு: உத்தரகாண்ட் சுரங்க மீட்பு புதிய அப்டேட்!

உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகளில் பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்பட்டு, சுரங்கப்பாதைக்குள் ஒரு சறுக்குவழியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன


சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 41 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Latest Videos

சுரங்கத்தின் 2 கி.மீ., பகுதி, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கான்கிரீட் கட்டமைப்பு, மீட்பு முயற்சிகளின் முக்கிய அங்கமாக உள்ளது. சுரங்கப்பாதையின்  இந்தப் பாதுகாப்பான பகுதியில், மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள், 4 அங்குல கம்ப்ரசர் குழாய் மூலம் வழங்கப்படுகின்றன.

பல்வேறு அரசு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு அமைப்புக்கும் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியவர்களின் மன உறுதியை அதிகரிக்க அரசு தொடர்ந்து அவர்களுடனான தகவல் தொடர்புகளை பராமரிக்கிறது.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கைகளின் முக்கிய அப்டேட்:
** அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்காக 6 அங்குல விட்டம் கொண்ட ஒரு கூடுதல் லைஃப்லைனுக்காக துளையிடும் பணியை என்.எச்.ஐ.டி.சி.எல் முடித்தது என்பது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பம்

** சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுடன் வீடியோ தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி குழாய்க்குள் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

** என்.எச்.ஐ.டி.சி.எல் சில்க்யாரா முனையிலிருந்து கிடைமட்டமாகத் தோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஆகூர் தோண்டும் எந்திரத்தைப் பயன்படுத்துகிறது.

** துளையிடும் இயந்திரத்திற்கான பாதுகாப்புச் சாசனம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாயின் விட்டம் மற்றும் வெல்டிங் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: எச்சரிக்கும் அமைச்சர் அதிஷி!

** செங்குத்து மீட்புக்கான எஸ்.ஜே.வி.என்.எல் இயந்திரம் அந்த இடத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த எந்திரத்தை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குஜராத், ஒடிசா மாநிலங்களில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

** ஏற்கனவே இரண்டு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக 6.4 மீட்டர் வரை வழி ஏற்பட்டுள்ளது.  ஒரு நாளைக்கு மூன்று முறை குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டு  சுரங்கம் தோண்டும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

** தொழிலாளர்களை மீட்பதற்காக கிடைமட்ட துளையிடல் மூலம் நுண்ணிய -சுரங்கப்பாதைக்கான இயந்திரங்களை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் ஒடிசாவில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

** மும்பை மற்றும் காசியாபாதில் இருந்து ஓ.என்.ஜி.சி வாகனங்கள் துளையிடுவதற்காக கொண்டு வரப்படுகின்றன.

** 180 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்பட்டு, சுரங்கப்பாதைக்குள் ஒரு சறுக்குவழியை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராணுவத்தினர் பெட்டிகளை குவித்து வருகின்றனர்.

** எஸ்.ஜே.வி.என்.எல் நிறுவனத்தால் செங்குத்து துளையிடலுக்கான அணுகு சாலையை 48 மணி நேரத்திற்குள் எல்லை சாலைகள் அமைப்பு விரைவாக உருவாக்கியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் புவியியல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

click me!