
இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு
வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதும், அவக்ள் மீது வன்முறையை தூண்டுவதும், பெண்களின்
புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதுபோன்று பெண்களை சித்தரிப்பதால், மன
உளைச்சலுக்கும் ஆளாகும் பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பெண்களை தவறாகவும், ஆபாசமாகவும், இணையதளங்கள் மூலம் சித்தரிப்பவர்கள் மீது பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி முதல் முறை தவறு செய்யும்போது 2 ஆண்டுகளும், இரண்டாவது முறை தவறு செய்யும்போது 6 மாதங்கள்
ளமுதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால், தற்போதைய இணைய யுகத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயல்பாடுகளைத் தடுக்க அந்த சட்டம் போதுமானதாக இல் என்று மத்திய அரசு
கருதுகிறது. எனவே இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில்
சட்டத்திருத்தம கொண்டு வரப்பட உள்ளது.
இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ளதைப்போல் தண்டனை விதிக்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு
அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தவறான முறையில் சித்தரிப்பவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் வரையும்,
ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரையும் தண்டனை வழங்கப்படும். பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டத்தில் திருத்தங்களைச்
செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.