வட்டி செலுத்தாததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்... உ.பி.யில் அவலம்

 
Published : Jun 05, 2018, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
வட்டி செலுத்தாததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்... உ.பி.யில் அவலம்

சுருக்கம்

Borrowers tongue Cut

கடனை திருப்பிக் கொடுக்காததால், கடன் வாங்கியவரின் நாக்கை, கந்துவட்டிக்காரர் அறுத்த கொடூரம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அமோரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வரும் ராஜு, அதே பகுதியில் வசிக்கும் கந்து வட்டிக்காரரிடம் கடன் வாங்கியுள்ளார்.

ராஜு, கடன் வாங்கிய நாளில் இருந்து சரியான நேரத்தில வட்டியினை செலுத்து வந்துள்ளார். ஆனால், சில நாட்களாக ராஜுவுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால், கந்துவட்டிக்காரரிடம் சரியான நேரத்தில் வட்டி செலுத்த முடியாமல் இருந்துள்ளார் ராஜு.

இந்த நிலையில், ராஜுவின் வீட்டுக்கு வந்த கந்துவட்டிக்காரர் கடுமையாக பேசியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கந்து வட்டிக்காரர், ராஜுவின் நாக்கை துண்டித்துவிட்டு சென்று விட்டார்.

இதைத் தொடர்ந்து ராஜு, அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு சென்று, கந்துவட்டிக்காரர் நாக்கை துண்டித்தது குறித்து புகார் தெரிவித்துள்ளார். கந்துவட்டிக்காரருடன் வந்த 3 பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

ராஜு கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கந்து வட்டிக்காரர் மற்றும் 3 பேரை தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"