அவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. மனைவி கோரிக்கை.. .நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு...

By Thanalakshmi VFirst Published Apr 8, 2022, 12:08 PM IST
Highlights

ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாக மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அந்த பெண்ணின் கணவருக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. 
நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 

ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாக மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அந்த பெண்ணின் கணவருக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. 
நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பில்வாரா மாவட்டத்தில் வசிக்கும் நந்தலாலு என்பவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது மனைவி,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாகவும் அதனால் அவருக்கும் பரோல் வழங்க வேண்டுவதாகவும் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார். ஆனால் அவரது மனு மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், மனைவி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர் நீதிமன்றம், மனிதாபிமான அடிப்படையில் கணவருக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் 11 மாதங்களுக்கு முன்பு நந்த்லால் 20 நாள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவரது மனைவி, வழக்கறிஞர் ஒருவருடன் சிறை அதிகாரிகளை அணுகி தான் தாயாக விரும்புவதாக கூறினார். தனது உரிமையை நிறைவேற்றும் வகையில் தனது கணவரை சில நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தினார். 

சிறை அதிகாரிகளிடம் இருந்து பதில் வராததால், கலெக்டரிடம் சென்று மனு அளித்தார். கலெக்டரும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நிலுவையில் வைத்திருந்தார்.இந்நிலையில் தான் இறுதியாக உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார்.  நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்த பெண், தன் கணவர் தற்செயலாக ஒரு குற்றத்தை செய்ததாகவும், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளி அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், தனது கணவர் சிறை விதிகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வம்சாவளியைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக குழந்தைகளைப் பெறுவது மத தத்துவம், இந்திய கலாச்சாரம் மற்றும் பல்வேறு நீதித்துறை தீர்ப்புகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே ரிக் வேதம் மற்றும் வேத பாடல்களை உதாரணம் காட்டி குழந்தை பிறப்பது அடிப்படை உரிமை என்றும் கூறியுள்ளனர்.
இதனால் ஆயுள் தண்டனை கைதிக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தண்டனை அனுபவித்து வருகிறது. இவர் சிறைக்கு செல்வதற்கு சில மாதங்கள் முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. இதற்கிடையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்திக்க முடியமால் இருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு முதல் பரோல் வழங்கப்பட்டது. 

click me!