கேதர்நாத் கோயில் கருவறையில் பணம் வீசிய பெண்; எப்ஐஆர் பதிவு செய்த போலீசார்

By Ramya s  |  First Published Jun 20, 2023, 10:10 PM IST

கேதர்நாத் கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பெண் ஒருவர் பணத்தை கொட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், இந்த பெண் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கேதர்நாத் கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு ருத்ராக்ஷி அணிந்து, வெள்ளை நிற புடவை அணிந்த பெண் ஒருவர் பணத்தை அள்ளி வீசுவதை அந்த வீடியோவில் காண முடிகிறது. இந்தக் காணொளியை அதே கருவறையில் நின்று மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி அனைவரின் கோபத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் கமிட்டி (BKTC) தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பின்னர் அந்த பெண் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

A woman showers notes at sanctum sanctorum of Kedarnath temple. Video goes Viral; Police registers FIR against the woman. pic.twitter.com/sA8qMyLxVM

— Megh Updates 🚨™ (@MeghUpdates)

 

Latest Videos

கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த வீடியோவை பதிவு செய்ய ஒருவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து பெரும் சர்ச்சையையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போன இன்ஜினியர்.! எல்லாமே பொய் - பதறிப்போய் விளக்கம் கொடுத்த நிர்வாகம்

மேலும் அப்பெண்ணை, கருவறைக்குள் நுழைய எப்படி அனுமதித்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பினர். மேலும் இது கலியுகம் என்று ட்விட்டர் பயனர் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பக்தர்களுக்கு கடவுளை தரிசனம் செய்ய 5 வினாடிகள் கூட வழங்கப்படவில்லை. இந்தப் பெண்மணி கருவறைக்குள் நின்று கொண்டு எப்படி இப்படி அகங்காரப் போக்கில் ஈடுபட முடியும்? கோவில் பண்டிதர்கள் கூட நின்று ரசிக்கிறார்கள் என்று மற்றொரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதற்கிடையில், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியின் (பிகேடிசி) தலைவர் அஜேந்திர அஜய், ருத்ரபிரயாக் டிஎம் மயூர் தீட்சித் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வீடியோவை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கேதார்நாத் கோவில் கமிட்டி சார்பில் மாவட்ட ருத்ரபிரயாக் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புகாரின் அடிப்படையில், கோட்வாலி சோன்பிரயாக், கேதார்நாத் தாமில் பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக பெண் மீது வழக்கு பதிவு செய்தார்.

போலீசை வைத்து மக்களை மிரட்டும் கர்நாடக அரசு... சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

click me!