டெல்லியில் கடைக்காரருக்கு முன்பே ஆடைகளை கழற்றி மற்ற ஆடைகளை அணியும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றை அதிநவீன தொழில்நுட்ப உலகில் பல வீடியோக்கள் சமூக வலைதலங்களில் பரவுகின்றன. ஆச்சர்யப்படும் வகையில் சில வீடியோக்கள் இருந்தாலும் சர்ச்சையை தூண்டும் வகையில் சில வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் டெல்லியின் பாலிகா பஜாரில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், துணிக்கடையில் ஆடை வாங்க சென்ற பெண் ஒருவர் உடைமாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் உடை மாற்றும் தனியறையில் இல்லை.. அந்த கடையில் பொதுவெளியிலேயே, அதுவும் அந்த கடைக்காரருக்கு முன்பே அந்த தனது ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, மற்ற ஆடைகளை அணிந்து பார்க்கிறார்.
दिल्ली के पालिका बाजार मे कपडे की दुकान पर.. वाली लड़कियों के मुजरे के बाद अब एक नया वीडियो.. हर कपडे की दुकान पर चेंजिंग रूम उपलब्ध है मगर यहाँ इस लड़की ने हदे ही पर कर दी। संभवत: वीडियो भी खुद बनवाई या किसी ने बनाई.. यह वीडियो अब वायरल है। pic.twitter.com/XJfsKVchpR
— TRUE STORY (@TrueStoryUP)
அடிப்படை கண்ணியம், தனியுரிமை பற்றி கவலைப்படாமல் பொதுவெளியில் ஆடைகளை மாற்றும் இந்த பெண்ணின் செயல் சமூகவலைதலங்களில் அதிர்வலைகளை தூண்டி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண்ணுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய தேர்தலை சீர்குலைக்க முயற்சி.. AI மூலம் ஸ்கெட்ச் போடும் சீனா.. மைக்ரோசாப்ட் ஷாக் ரிப்போர்ட்..
சமூக வலைதலங்களில் பதிவிடுவதற்கு அந்த பெண் இதை செய்திருக்கலாம் என்றும், பிரபலமடைவதற்காக இந்தளவுக்கு செல்வதா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பயனர் ஒருவர் “ பெண்ணியம் சமூகத்தை வழிநடத்தும் இடம் இதுதான். பெண்கள் தெருவில் நிர்வாணமாக நடப்பது அதிகாரம் மற்றும் ஒரு ஆண் அவளைப் பார்க்கும்போது அல்லது சமூகம் அவர்களின் குழந்தைகளை மறைக்கும்போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் மற்றொரு பயனர் "இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது மற்றும் விற்பனையாளர் அதன் ஒரு பகுதியாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவெளியில் பெண் ஆடை மாற்றும் சம்பவம் நடைபெறுவது இது முதன்முறையல்ல. டெல்லி என்சிஆர் முழுவதும் பொது இடங்களில் பெண்கள் உடை மாற்றுவது போன்ற சர்ச்சைக்குரிய வைரல் வீடியோக்கள் சமீபத்திய மாதங்களில் அதிகமாக வெளிவருகின்றன. மெட்ரோ ரயில்களில் ஆபாச நடனங்கள் தொடங்கி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முத்தம் கொடுப்பது வரை பல வீடியோக்கள் பரவுவதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோக்கள் தனிநபர்களின் கவலைக்குரிய போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சில வழக்குகளில் கைது நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.