வங்கியில் பணம் எடுத்தாலும், போட்டாலும் கட்டணம்...பாஸ்புக் பிரின்டிங் உள்ளிட்டபல இலவச சேவைகளுக்கும் விரைவில் ‘சூடு’ வைப்பு

 
Published : Jan 13, 2018, 08:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
வங்கியில் பணம் எடுத்தாலும், போட்டாலும் கட்டணம்...பாஸ்புக் பிரின்டிங் உள்ளிட்டபல இலவச சேவைகளுக்கும் விரைவில் ‘சூடு’ வைப்பு

சுருக்கம்

withdrawel or deposit it wil be charges

வங்கிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு இலவச சேவைகளான பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் முதலாவதாக பேங்க் ஆப் இந்தியா வங்கி இதுவரை அளித்து வந்த பல்வேறு இலவச சேவைகளுக்கும், வரும் 20-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

இப்போதுவரை அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவை சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாமல் இருத்தல், மொபைல் பேங்கிங் சர்வீஸ், ஏ.டிஎம்.களில் இருந்து பணம் எடுத்தல் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே கட்டணம் வசூலித்து வந்தன.

ஆனால், வங்கிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றம், ஒரே வங்கியின் பல்வேறு கிளைகளுக்கு பணம் அனுப்புதல், பாஸ்புக் அச்சிடுதல், காசோலை, வரைவோலை, முகவரி மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்காக இலவசமாகவே அளித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த சேவைகளுக்கு அனைத்தும் ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற அடிப்படையில் வங்கிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் முதலாவதாக பேங்க் ஆப் இந்தியா வங்கி செயலில் இறங்கிவிட்டது.

வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இலவசமாக அளித்து வந்த பாஸ்புக் அச்சிடுதல், முகவரி மாற்றுதல், காசாலோ, வரைவோலை அளித்தல், என்.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணம் அனுப்புதல், மாத, காலாண்டு, அரையாண்டு ஸ்டேட்மென்ட் அளித்தல், நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தல், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றுக்கு ரூ. 10 முதல் ரூ.25 வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த நடைமுறையை அரசுவங்கிகளும், தனியார் வங்கிகளும் பின்பற்ற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை