7 ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்... கடலில் கண்டெடுத்த 3 பேர் உடல்கள்...

 
Published : Jan 13, 2018, 05:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
7 ஊழியர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்... கடலில் கண்டெடுத்த 3 பேர் உடல்கள்...

சுருக்கம்

Helicopter magic with 7 employees

மும்பையில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் 5 ஊழியர்கள் உள்பட 7 பேர் சென்ற பவான் ஹான்ஸ்ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர், பவான் ஹன்ஸ்ஹெலிகாப்டர் மூலம் கடலில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்துக்கு நேற்று சென்றனர்.  சரவணன், வி.கே.பாபு, ஜோஸ் அந்தோனி, பங்கஜ் கார்க், பி. ஸ்ரீனிவாசன் ஆகிய  5 துணை பொதுமேலாளர்களும்ஹெலிஹாப்டரில் பயணித்தனர்.

ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு பைலட்  2 பேர் உள்ளிட்ட 7 பேர் சென்றஹெலிகாப்டர் சரியாக 10.58 மணிக்கு சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்று சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால்,  தஹானு கடற்பகுதிக்குள் ஹெலிகாப்டர் சென்றபின் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. கடைசியாக 10.35 மணிக்குபின் ஹெலிகாப்டரின் சமிக்கை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து, உடனடியாக மீட்புப்படையினர், கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணியும், மீட்புப் பணியும் தொடங்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்,ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் மிதந்து வருவதை மீட்புப்படையினர் கண்டுபிடித்தனர். 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய கடலோர பாதுகாப்பு படை டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “ மும்பை ஜூஹூ விமான தளத்தில் இருந்து  ஓ.என்.சி.ஜி. ஊழியர்கள் 5 பேர், 2 பைலட் சென்ற பவான் ஹன்ஸ் நிறுவனத்தின்ஹெலிகாப்டர் கடலில் மாயமானது. இதற்கான தேடுதல் வேட்டையில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படையினர் அதிநவீன ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “ ஓ.என்.ஜி.சி.ஊழியர்கள் சென்றஹெலிகாப்டர் கடலில் விழுந்தது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசி, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை மூலம் தேடுதல் பணியையும், மீட்புப்பணியையும் தீவிரப்படுத்தி இருக்கிறேன். ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள், பைலட்கள் உயிர்பிழைக்க பிரார்திப்போம்’’ என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்டா நிலம், தங்கம், தாய்லாந்து டூர்! புனே தேர்தலில் வேட்பாளர்களின் அதிரடி ஆஃபர்! வாக்காளர்கள் குஷி!
பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை