pm modi: பிரதமர் நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களிடம் ‘ஒழுக்கச் சான்று’! யுடர்ன் அடித்த இமாச்சல் போலீஸார்

By Pothy Raj  |  First Published Oct 4, 2022, 2:33 PM IST

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு “கேரக்டர் சான்று” கோரப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.


இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை செல்லும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு “கேரக்டர் சான்று” கோரப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

கேரக்டர் சான்று என்பது, அரசு அதிகாரிகள், போலீஸார் தரப்பில் ஒருவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இல்லை என்று கூறி அளிக்கும் ஒழுக்கச் சான்றாகும்.

Tap to resize

Latest Videos

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இமாச்சலப்பிரதேசத்தில்உள்ள அனைத்து பத்திரிகையாளர்கள், செய்தி சேகரிப்பாளர்கள், புகைப்படநிருபர்கள், வீடியோகிராபர்கள்,தங்களின் அடையா அட்டையுடன் கேரக்டர் சான்றும் அளிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 29ம் தேதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

புதிய நீதிபதிகள் நியமனம்: தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் நீதிபதிகள் இருவர் எதிர்ப்பு

தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியா நிருபர்கள் கூட இந்த கேரக்டர் சான்று தாக்கல் செய்யக் கோரப்பட்டிருந்தது.இந்த சான்றிதழ்கைகளை அக்டோபர் 1ம் தேதிக்குள் வழங்குவோருக்கு மட்டும்தான் அனுமதிபாஸ் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிலாஸ்பூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் இன்று காலை ஒருசுற்றறிக்கையை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் “ எங்களின் அலுவலகத்தில் இருந்து இதுபோன்ற கடிதம் வெளியிட்டமைக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த கடிதம் திரும்பப் பெறப்படுகிறது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்திசேகரிக்க அனைத்து பத்திரிகையாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள். ஊடகங்களுக்கு அரசு அலுவலகம் சார்பில் பாஸ் வழங்கப்படும்”எ னத் தெரிவிக்கப்பட்டிருந்தது

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை; வீட்டுப் பணியாளர் கைது!!

இதனிடையே இமாச்சலப்பிரதேச காவல்துறை தலைவர் சஞ்சய் குந்து ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் “ பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு செய்திசேகரிக்க அனைத்து பத்திரிகையாளர்களும் வரவேற்கப்படுகிறார்கள். இமாச்சலப்பிரதேச போலீஸார் அதற்கு தேவையான வசதிகளை செய்வார்கள். அசவுகரியக் குறைவு ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர்களிடம் ஒழுக்கச் சான்று கேட்டதற்கு பத்திரிகையாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, போலீஸார் தங்கள் நடவடிக்கையிலிருந்து  பின்வாங்கினர்.

மூத்த பத்திரிகையாளர் மஞ்ஜீத் சேஹல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளரிடம் ஒழுக்க சான்று கேட்பது என்பது, எங்கள் அலுவலகத்தில் வழங்கிய அடையாள அட்டையை சந்தேகிப்பது போன்றது. நாங்கள் எங்கு செல்வது” எனத் தெரிவித்தார்

இமாச்சலில் நாளை நடக்கும் தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பு

மூத்த பத்திரிகையாளர் மிரினால்  பாண்டே ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “ விரைவில் தேர்தலை வைத்துக்கொண்டு, பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க, அனைத்து பத்திரிகையாளர்களிடம் நல்ஒழுக்க சான்று கேட்கிறது இமாச்சல அரசு” எனத் தெரிவித்துள்ளார்.
 

click me!