அரசியல் ரீதியாக நான் தலையிட்டு இருந்தால், அதற்கான ஒரு உதாரணத்தை முதல்வர் பினராயி விஜயன் காண்பித்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வதற்கும் தயாராக இருக்கிறேன் என்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் முகமது கான் தலையிடுகிறார் என்று கேரளா முதல்வர் குற்றம்சாட்டி இருந்தார். இதை கடுமையாக ஆளுநர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளார். இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான சர்ச்சை நீடித்து வருகிறது.
இதுகுறித்து இன்று ஆளுநர் முகமது கான் கூறுகையில், ''துணை வேந்தர்களாக நான் ஆர்எஸ்எஸ் சார்ந்தவர்களை கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறேன் என்று கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் மட்டுமில்லை, யாராவது ஒருவரைக் கூட எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் நியமனம் செய்து இருக்கிறேன் என்று கூறினால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை நிரூபிக்க தவறினால், முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில் ஒரு அரசாங்கத்தை நடத்துவதாகவும், அவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகவும் கூறுகின்றனர். சிபிஐஎம் தலைவர்களின் தரம் குறைந்த மற்றும் தரம் இல்லாதவர்களை உறவுகளை நியமனம் செய்வதுதான் இவர்களின் தரமா? முதல்வரின் அலுவகத்தில் இருப்பவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசு, முதல்வர் அலுவகம் மற்றும் முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கடத்தலில் ஈடுபடும்போது, அங்கு என்னுடைய தலையீடு தேவைப்படுகிறது.
Kerala high Court: கேரளாவில் 9 துணைவேந்தர்களும் பதவியில் நீடிக்கலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!!
இதுபோன்ற காரணங்களால்தான் என்னுடைய தலையீடு இருக்கிறது. கேரளா முதல்வர் மீது நான் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் வைக்கவில்லை. முதல்வரின் செயலாளர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல்வருக்குத் தெரியாமல் அந்த செயலாளர் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவினாரா? இது முதல்வரின் திறனை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
ஒரு மாதமாக, பல்கலைக் கழகம் தொடர்பான ஒவ்வொரு ஆவணங்களையும் திருப்பிக் கொடுத்தேன். அனைவருக்கும் 'லக்ஷ்மண் ரேகா' உள்ளது. ஆளுநருக்கு பதிலளிக்காததும் 'லக்ஷ்மண் ரேகா'வை முதல்வர் மீறுகிறார் என்று பொருள்படுகிறது. முதல்வரின் அலுவலகத்தில் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கப்படுகிறது'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.
Kerala guv vs CM row: ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்த பின்னர் ஆடியோவை வெளியிட்ட கேரள ஆளுநர்!!