ஜிஎஸ்டி-க்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்..? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

 
Published : Jan 18, 2018, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஜிஎஸ்டி-க்குள் வருகிறதா பெட்ரோல், டீசல்..? இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சுருக்கம்

will petrol and diesel coming under GST

24வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த வரியும் ஆடம்பர பொருட்களுக்கு அதிகபட்ச வரியும் விதிக்கப்பட்டுள்ளது. சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யுடன் கூடுதலாக செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.

விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டரின் உதிரி பாகங்களுக்கு 28% வரி, ஜவுளி பொருட்களுக்கு 28% வரி மற்றும் கடலைமிட்டாய், கருவாடு ஆகியவற்றின் மீதான அதிகமான வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. 

இதையடுத்து இதுதொடர்பாக ஆய்வுசெய்த துணைக்குழு, 166 பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி, கடந்த நவம்பர் 10ம் தேதி குவாஹத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான அதிகபட்ச வரி குறைக்கப்பட்டது. 50 பொருட்களை மட்டுமே அதிகபட்சமான 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், 24வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தின் சார்பில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்.

இந்த கூட்டத்தில், மேலும் பல பொருட்களின் அதிகபட்ச வரிவிதிப்பு குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுவரை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படாத பெட்ரோல், டீசல் ஆகியவையும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் பெட்ரோல், டீசலின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"