
நாட்டில் உள்ள அனைத்து ரூ.10 நாணயங்களும் செல்லும் என இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.10 நாணயம் செல்லாது என இந்தியா முழுவதும் பெரும் புகார் எழுந்தது. இதையடுத்து எல்லாரும் ரூ. 10 நாணயங்கள் வாங்கவே பயப்பட்டனர்.
இதுகுறித்து ரூ. 10 நாணயங்களை வாங்க இந்தியா முழுவதும் மக்கள் மறுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.10 நாணயங்கள் செல்லாது என மக்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரூ.10 நாணயங்களும் செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள 14 வகையான ரூ.10 நாணயங்களும் செல்லத்தக்கதுதான் எனவும் ரூ.10 நாணயங்களை பணப் பரிவர்த்தனை மற்றும் பண மாற்றத்துக்கு ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.