அதிர்ச்சி..! சண்டை போட்டதால் ஆத்திரம்.. மனைவியை ரூ.1.5 லட்சம் விற்ற கணவன்.. இறுதியில் நடந்தது என்ன..?

Published : Apr 16, 2022, 08:29 PM IST
அதிர்ச்சி..! சண்டை போட்டதால் ஆத்திரம்.. மனைவியை ரூ.1.5 லட்சம் விற்ற கணவன்.. இறுதியில் நடந்தது என்ன..?

சுருக்கம்

தன்னுடன் சண்டை போட்ட காரணத்திற்காக மனைவியை 1.5 லட்சம் ரூபாய் பணத்திற்கு விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் அந்த பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.   

தன்னுடன் சண்டை போட்ட காரணத்திற்காக மனைவியை 1.5 லட்சம் ரூபாய் பணத்திற்கு விற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் அந்த பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் ராம்பூர் கிராமத்தில் இளம்பெண்ண கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்.  சுப்ரியா பிரஜாபதி என்ற பெண்ணை மீட்டனர். மேலும் அவரை ராஜஸ்தான் கொண்டு செல்ல முயன்ற நிலையில் மூவரை கைது செய்தனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டபோது தெரிய வந்த தகவல்கள் அனைத்தும் பகீர் ரகமாக இருந்துள்ளது. 

கடத்தப்பட்ட பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், பிரஜாபதி தன் கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரூ.1.5 லட்சத்திற்கு தனது மனைவியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் பிரஜாபதியிடம் விற்றுள்ளார். இதனிடயே அந்த பெண்ணை வாங்கிய மனோஜ் பிரஜாபதி அவரை கட்டாய திருமணம் செய்துள்ளார். மேலும்  ராஜஸ்தான் சென்று கணவன் மனைவியாக வாழலாம் என்று கூட்டிச் செல்லும்போது காவல்துறையினரிடம் சிக்கியது விசாரணையில் அம்பலமாகியது. 

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜார்சுகுடாவைச் சேர்ந்த ஹ்ருசிகேஷ் சேத்தி, கிரண் சேத்தி மற்றும் டானிஷி ஆகிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பெண்ணின் கணவனை தேடி வருகின்றனர். இந்நிலையில் கட்டாய திருமணம் செய்துக்கொண்ட மனோஜ் பிரஜாபதி “நான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவே ₹1.5 லட்சம் கொடுத்தேன். அவள் ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றவள் என்பது எனக்குத் தெரியாது” என்று  போலீசாரிடம் கூறியுள்ளார். தற்போது மனோஜை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?