prashant Kishor: காங்கிரஸுடன் 'கை'கோர்க்கும் பிரசாந்த் கிஷோர் : மக்களவைத் தேர்தல் வியூக திட்டம் தாக்கல்

By Pothy RajFirst Published Apr 16, 2022, 5:02 PM IST
Highlights

prashant Kishor : 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் குறித்த விரிவான செயல்திட்டத்தை தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ளார், ஒருவராத்தில் முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் குறித்த விரிவான செயல்திட்டத்தை தலைவர் சோனியா காந்தியிடம் பிரசாந்த் கிஷோர் வழங்கியுள்ளார், ஒருவராத்தில் முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றுவாரா அல்லது காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிஷோரின் பணி

இதற்குமுன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து பிரசாந்த் கிஷோர்  வெல்ல வைத்தார். அதன்பின் 2015ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து பிரசாந்த் கிஷோர் தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.

ஆனால், கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

காங்கிரஸுடன் நெருக்கம்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அதில் திரிணமூல் காங்கிரஸை வெல்ல வைத்து,  தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தினார். 

விமர்சனம்

ஆனால் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சிக்கத் தொடங்கினார். வெளிப்படையாக ராகுல் காந்தி, சோனியா காந்தியையும் பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். மத்தியில் ஆளும் பாஜகவை இப்போதுள்ளகாங்கிரஸ் கட்சியால் வீழ்த்த முடியாது என்று கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேர்வது சந்தேகம் என தகவல்கள் வெளியாகின

4 மணிநேரம் ஆலோசனை

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, அஜெய் மகான் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர்  இன்று ஆலோசனை நடத்தினார். 4மணிநேரம் நடந்த இந்த ஆலோசனையில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இணைந்து பணியாற்றுவது மற்றும் குஜராத் சட்டப்பேரவைத்தேர்தலில் மட்டும்இணைந்து பணியாற்றுவதா என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஒரு வாரம் பொறுங்கள்

ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார், அதில் “ 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை பிராசந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையிடம் வழங்கியுள்ளார். பிரசாந்த் கிஷோர் வழங்கிய திட்டம் குறித்து, காங்கிரஸ் தலைவர் அமைத்த குழு அந்த அறிக்கை குறித்து ஆலோசித்து இறுதி முடிவை ஒருவாரத்துக்குள் அறிவிக்கும். அனைத்து விவரங்களும் ஒருவாரத்துக்கும் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்
 

click me!