கொரோனா நான்காம் அலை வருமா..? வராதா..? புது விளக்கம் அளித்த மத்திய அரசு..

By Thanalakshmi V  |  First Published Apr 16, 2022, 4:25 PM IST

டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏறுமுகமாக பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் நான்காம் அலை ஏற்படும் என்று தெரிவிக்க இயலாது என  தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் மருத்துவர் ஜெயபிரகாஷ் முரளி தெரிவித்துள்ளார்.
 


அதிகரிக்கும் கொரோனா:

சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவில் நான்காம் அலை மீண்டும் ஏற்படுமாக என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு ஏற்றாற்போல், தில்லி, ஹரியானா, கேரளம், குஜராத் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இதுவரை இறங்குமுகமாக இருந்த கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக பதவியாகி உள்ளன. இதனிடையே டெல்லியில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பள்ளிகளுக்கு புதிய கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Latest Videos

undefined

இந்நிலையில் இதுக்குறித்து பேசிய தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் மருத்துவர் ஜெயபிரகாஷ் முரளி, தற்போது அதிகரித்து பதிவாகும் பாதிப்பு, ஒரு திடீர் மாற்றமாகும். அதுவும் ஒரு சதவீதத்திற்கு குறைவான பாதிப்பு தான் பதிவாகியுள்ளது.  இதனால் இதை வைத்துக்கொண்டு, அடுத்த அலை உருவாகிவிடும் என்று கூறவிடமுடியாது என்று தெரிவித்துள்ளார். 

நான்காம் அலை எப்போது..?

மேலும் நாட்டில் ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலை தற்போது நன்கு குறைந்துள்ளது. ஜனவரியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் நாட்டில் உயிரழப்புகளும் குறைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. கொரோனா ஊரடங்கில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு இடங்களுக்கு குடும்பங்களுடன் சென்று வரும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, கொரோனா பாதிப்பில் திடீர் அதிகரிப்பு இருக்க தான் செய்யும் என்று பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பேராசிரியர் கே.எஸ்.ரெட்டி கூறியுள்ளார். ஆனால் நாட்டில் ஜூன் மாதம் இறுதியில் கொரோனா நான்காம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்தில் பாதிப்புகள் உச்சத்தை தொடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏனினும், இந்த ஆய்வு முடிவுகள் குறித்து மறுஆய்விற்குட்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆய்வு முடிவுகள் சொல்லுவது என்ன?

மேலும் உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து மீண்டும் குறைய தொடங்குகிறது. ஏனவே நாட்டில் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று ஐஐடி கான்பூர் சேர்ந்த டாக்டர் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 949 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 975 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 796 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 186.38 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முகக்கவசம் தேவையில்லையா.? யார் சொன்னது.? உஷாரா இருங்க.. எச்சரிக்கும் ராதாகிருஷ்ணன் !

click me!